எம்.வை.அமீர், எம்.ஐ.சம்சுதீன்:
நாட்டின் சட்டத்தை நிலைநாட்ட பொலிசார் எவ்வளவு முக்கியமோ அதேபோன்று நாட்டின் சுகாதாரத்தை பேணுவதற்கு சுகாதாரத் தொழிலாளிகள் அவசியமானவர்கள் இந்த அடிப்படையில் சுகாதாரத் தொழிலாளிகள் மாநகரசபையின் முதுகெலும்பாக மதிக்கப்பட வேண்டியவர்கள் என்று கல்முனை மாநகரசபையின் முதல்வர் சட்டமுதுமாணி நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
கல்முனை மாநகரசபையில் பணிபுரியும் சுகாதாரத் தொழிலாளிகளுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு (2014-04-02) இன்று காலை, கல்முனை மாநகரசபை முற்றலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்படி கருத்துக்களை முதல்வர் நிஸாம் காரியப்பர் தெரிவித்தார். நிகழ்வில் கல்முனை போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யு.று.யு. ககப்பார் விசேட அதிதியாக கலந்துகொண்டார்.நாட்டின் சட்டத்தை நிலைநாட்ட பொலிசார் எவ்வளவு முக்கியமோ அதேபோன்று நாட்டின் சுகாதாரத்தை பேணுவதற்கு சுகாதாரத் தொழிலாளிகள் அவசியமானவர்கள் இந்த அடிப்படையில் சுகாதாரத் தொழிலாளிகள் மாநகரசபையின் முதுகெலும்பாக மதிக்கப்பட வேண்டியவர்கள் என்று கல்முனை மாநகரசபையின் முதல்வர் சட்டமுதுமாணி நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித்தலைவர் ஏ.அமிர்தலிங்கம், மாநகரசபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ், மாநகரசபை உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார் மற்றும் கல்முனை மாநகரசபையின் ஆணையாளர் ஜே.லியாக்கத் கல்முனை மாநகரசபையின் பிரதம வைத்திய அதிகாரி எம்.சீ.மாஹிர், முதல்வர் நிஸாம் காரியப்பரின் பிரத்தியோக செயலாளர் ரீ.எல்.எம்.பாருக் போன்றோரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
போலீசாரைப் போன்று அடையாளம் காண்பதற்காகவே சீருடைகள் வழங்கப்படுவதாகவும் சுகாதார ஊழியர்களுக்கு எதிர்காலத்தில் அவர்கள் அணிந்து செயற்படக்கூடிய அவர்களுக்கு பாதுகாப்பான அனைத்து வகயானா பொருட்களும் அவர்களுக்குரிய அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்றும் முதல்வர் இங்கு உறுதியளித்தார்.

0 comments:
Post a Comment