பி.எம்.எம்.ஏ.காதர்;
ஈழத்து தமிழ் இலக்கியம் ஆரோக்கியமான திசையில் வளர்ச்சி அடையினும் புனை கதைத்துறை பற்றி வேறுபட்ட பல்வேறு அபிப்பிராயங்கள் உள்ளன.1956 இற்குப் பின் நடைமுறைக்கு வந்த சுயமொழிக் கல்வியினால் உருவாகிய பட்டதாரி மாணவர்களில் இடதுசாரி சிந்தனைப் போக்குள்ள சிலர் எழத்துத்றையில் ஈடுபாடு காட்டி ஈழத்து புனைகதைத் துறைக்குப் புதிய பாதை வகுத்தனர் எனக் குறிப்பிடுவர். என தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லா தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் பிரதம அதிதியாகக் கலந்து கொன்டார். நூலின் முதல் பிரதியை சம்மாந்துறை அறோமாஸ்; நிறுவனத்தின் முகாமைத்துவப்; பணிப்பாளர் எம்.எஸ்.எம்.அஸாறுதீன் பிரதம அதிதியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
இங்கு கலாநிதி றமீஸ் அப்துல்லா மேலும் உரையாற்றுகையில் :- இந்த வளர்ச்சியின் இன்னொரு கட்டமாகவும் முஸ்லீம் பெண்கள் தொடர்பான புதிய தொரு அபிப்பிராயத்தற்கு வருவதற்குக் காலாகவும் தென்கிக்குப் பல்கலைக் கழகத்தைப் பற்றிக் குறிப்பிட வேண்டியுள்ளது.
1995இல் உருவாகிய தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அப்பொது முஸ்லீம் மாணவர்களையே பெரும்பான்மையாகக் கொண்டிருந்தது. முஸ்லீம் சமூகம் பற்றிய புதிய பார்வையை வகுத்துக் கொள்;ள இம்மாணவர் சமூகம் காலாய் அமைந்தது. அதிலும் குறிப்பாக முஸ்லீம் பெண்களின் விழிப்புணர்வையும் பங்குபற்றுதலையும் பற்றித் தெரிந்து கொள்ள இந்தப் பல்கலைக்கழக மாணவர் எம்.அப்துல் றஸாக் எழுதிய 'வாக்கு மூலம்' என்ற நாவல் பெரிதும் உதவும்.
ஈழத்துத் தமிழ் உலகக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் தமது வெளியீடுகள்; மூலம் பல்வெறு செய்திகளைச் சொன்ன வரலாறு உள்ளது. அவர்களின் பங்குபற்றுதல்கள் பற்றித் தனியாக ஆராய வேண்டியுள்ளது. இந்தப் பின்;புலத்தில் இருந்தும் பேசப்பட வேண்டிய ஒருவர் 'நிழலைத் தேடி' நாவலின் ஆசிரியர் செல்வி இன்ஷிராஹ் இக்பால்.
இந்த நாவல் ஆசிரியர் இன்ஷிராஹ் சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்தவர.;; சுலைமா சமி இக்பால் என்ற சிறுகதை, நாவல் ஆசிரியரின் மகள். பாடசாலைக் காலத்திலே பல்துறை ஆற்றல் வாய்க்கப் பெற்றவர். அக்காலத்திலே 'பூமுகத்தில் புன்னகை' என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டவர்.
இவ்வரிசையில், இவரது பல்கலைக்கழகக்; காலத்தில் 'நிழலைத் தேடி'என்ற நாவலைத்; தந்துள்ளார்; ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் நாவல் எழுதுவதில் ஈடுபாடு கொண்டவர்கள் மிகக்குறைவு தரமிக்க தமிழ் நாவல்களைக் காண்பதுவும்மிக அரிது! இத்துயரத்துள் ஆரம்பநிலை எழத்தாளர் ஒருவர-; பல்கலைக்கழக மாணவி ஒருவர் முஸ்லீம் பெண் ஓருவர் இத்துறையில் ஈடுபாடு காட்டியிருப்பது மிகுந்த திருப்தியைத் தருகி;றது.
'நிழலைத் தேடி' என்ற இந்த நாவல் ஒருவகையில் பெண்ணிலைப்பட்ட துயரங்களை வெளிப்படுதினும் அதனூடாக அப்பெண்ணின் இலட்சிய மனோபாவம் நிறைவேறுவதையும் எடுத்துக்காட்டுகிறது. உண்மையில் வாழ்க்கையில் பெண்கள் மிகத் துயரப்படுகின்றார்கள் என்பதற்கு இந்நாவல் ஒரு சிறந்த உதாரணமாகும். அதேநேரம் அந்தத் துயரம்; பெண்களாலே நிகழ்ந்து விடுகிறது என்ற துர்ப்பாக்கியத்தையும் இந்த நாவல் வெளிப்டுத்துகிறது. அதே பெண் தன் உன்னதமான தாய்மைக் குணங்களால் அன்பினால் தன் எண்ணங்களை வெல்லவதும் இந்த நாவலிலே எடுத்துக்காட்டப்படுகிறது.
இவ்வகையில் ஒரு பெண்ணினுடைய வாழ்க்கைச் சிக்கல்களையும் முரண்பாடுகளையும் ஆசைகளையுமே இந்த நாவலில் மிகவம் லாவகமா இன்ஷராஹ் வெளிப்படுத்தியிருக்கிறார் நாவல் என்ற கலை வடிவத்தைக் கச்சிதமாகக் கையாளுகிற திறன் இன்ஷிராவுக்கு உண்டு என்பது மன நிறைவைத் தருகிறது.
வாழ்க்கையைப் பிரதிபலிக்கி;ற நிலைக்கண்ணாடியாக நாவல் அமைகிறது. வால்வியல் சிக்கல்களையும் அதன் உயர்வையும் சிறுமைகளையும் மனித சமூகத்தில் உள்ள பாத்திசங்களைக் கொண்டு மிக அற்புதமாக சிருஷ்டிக்கிறபணியை இவ்வெழுத்தாளர் நிறைவேற்யுள்ளார்.
சென்ற காலத்தினையும் நிகழ்காலத்தினையும் எதிர்காலத்தினையும் சிருஷ்டியின் மேன்மை குன்றாமல் கற்பனைச்; சுவையுடன் யதார்த்தத்துடன் சித்தரிக்கிற பண்பு நாவலுக்கு உண்டு. மொத்தத்தில் பல கதாபாத்திரங்களைக் கொண்டு வாழ்க்கையின் பல் வெறு சிக்கல்களையும் முழுமையாகச் சிருஷ்டிக்க இந்த நாவல் துணிகிறது. ஆகவே நாவலுக்குரிய பெரும்பாலான பண்புகளையும் 'நிழலைத் தேடி' என்ற இந்த நாவல் பிரதிபலிக்கிறது என்று சொல்லலாம். என கலாநிதி றமீஸ் அப்துல்லா மேலும் தெரிவித்தார்.
;இந்த நிகழவில் எழுத்தாளர் உமாவரதராஜன், கவிஞர்களான அன்புடீன், பாலமுனை பாறூக், முழுமதி எம் முர்தலா, மருதமுனை அலறி, றகுமான் ஏ ஜமீல் உள்ளிட்ட பிரதேச இலக்கிய வாதிகளும,; பல்கலைக்கழக பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.
நூலாசிரியர்;;;; செல்வி இன்ஷிராஹ் இக்பாலுக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி சபீனா எம்.ஜி.ஹஸன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இந்த நூல் உயர் கல்வி அமைச்சினால் பல்கலைக்கழக மற்றும் உயர் கல்வி நிறுவன மாணவர்களுக்கிடையே தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட இளம் சாதனையாளர்களுக்கான போட்டியின் நாவல் பிரிவில் முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மாவனெல்லை பதுரியா மத்திய கல்லூரியின் பழைய மாணவியான நூலாசிரியர் செல்வி இன்ஷிராஹ் மௌலவி ஏ.சீ.எம்.இக்பால் எழுத்தாளர் சுலைமா சமி இக்பால் தம்பதியின் சிரேஸ்ட புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment