• Latest News

    April 23, 2014

    கல்முனை பிரதேச செயலக மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி

     எஸ்.அஷ்ரப்கான் ;
    கல்முனை பிரதேச செயலக மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்று (20) ஞாயிற்றுக்கிழமை கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.எம். றஸீனின் வழி நடாத்தலில் இடம்பெற்றது.

    கல்முனை பிரதேச செயலாளர் எம். ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இவ்விளையாட்டு நிகழ்விற்கு பிரதம அதிதியாக திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைப் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸ் கலந்து கொண்டு வெற்றிபெற்ற கழகங்களுக்கு கிண்ணங்களை வழங்கி  கௌரவித்தார்.
    இன்று நடைபெற்ற உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக்கழகம் மோதியது. மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக்கழகம் 1 க்கு 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

    கல்முனை பிரதேச செயலக மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியில் 101 புள்ளிகளைப்பெற்று கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகம் 2014 ஆம் ஆண்டுக்கான சம்பியனாக தெரிவானது.

    இப்போட்டிகளுக்கு கல்முனைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மிஸ்பாஹ், சனிமௌன்ட், றோயல், யுனிவர்ஸ், லக்கி ஸ்டார், ஸ்றீல் வோய்ஸ், வொறியஸ் ஆகிய விளையாட்டுக் கழகங்கள்  பங்கு பற்றியிருந்தன.

    இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட விளையாட்டுத்துறை விரிவுரையாளர் எம்.ஐ.எம். முஸ்தபா, ஓய்வுபெற்ற மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஏ. நபார், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் எஸ்.எம். றபாய்தீன், ஆசிரியர் ஐ.எல்.எம்.இப்றாஹீம், விளையாட்டு உத்தியோகத்தர்களான எம்.பி.எம். றஜாய், பி.வசந்த், விளையாட்டு பயிற்று விப்பாளர் ஏ.எல்.அனஸ் அஹமட், விளையாட்டு ஆசிரியர்களான ரீ.கே.எம்.சிராஜ், ஏ. ஸியாம், தலைமை நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எச்.ஏ. லாஹீர், சலாச்சார உத்தியோகத்தர் றஸ்மி மூஸா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
    Displaying ALIM0025.JPG 
    Displaying ALIM0031.JPG

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை பிரதேச செயலக மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top