எம்.வை.அமீர்;
அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் நாளை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அஷ்ரப் ஞாபகார்த்த வாசிகசாலை மற்றும் வர்த்தக முகாமைத்துவ பீடத்துக்கான கட்டிடத்தொகுதி என்பவற்றை மாணவர்களிடம் கையளிப்பதற்காக வருகைதரவுள்ளார்.
சுமார் 360 மில்லியன் ரூபாய்கள் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட இக்கட்டிட தொகுதிகளை கையளிக்கும் நிகழ்வுக்கு அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் வருகை தவுல்லத்தை முன்னிட்டு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களது தலைமையில் பல்வேறுபட்ட குழுக்கள் செயற்பட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இரவு பகலாக இடம்பெறும் ஏற்பாட்டுப்பணிகளில் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்கள் பதிவாளர் எச்.எம்.ஏ.சத்தார் அவர்கள் மற்றும் பீடாதிபதிகள் திணைக்களத்தலைவர்கள் விரிவுரையாளர்கள் கல்விசாரா ஊழியர்கள் என அனைவரும் இணைந்து செயற்படுவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment