• Latest News

    April 20, 2014

    தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களுக்கு ரூபா 131 மில்லியனில் விடுதிக் கட்டிடத் தொகுதி

    எம்.வை.அமீர்;
    தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 360 மில்லியன் செலவில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட அஷ்ரப் ஞாபகார்த்த நூலகம் மற்றும் வர்த்தக முகாமைத்துவ பீடத்துக்கான கட்டிடத்தொகுதிகளை, மாணவர்களின் பாவனைக்கு திறந்து வைப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் இன்று காலை 10.30 மணிக்கு ஒலுவிலுக்கு வருகை தந்திருந்தார்.  
    இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து ஒலுவில் வளாகத்திலும் சம்மாந்துறை வளாகத்திலுமாக இரண்டு மாணவர்களுக்கான விடுத்திதொகுதிகளுக்கும் கால்கள் நடப்பட்டன.
    சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தில் சுமார் 131 மில்லியன் ரூபாய்கள் செலவில் மூன்று மாடிகளைக்கொண்டதாக உயர் வசதிகளுடன் கூடிய விடுதித்தொகுதிக்கான கல்நாட்டு நிகழ்வின் பிரதம அதிதியாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க அவர்கள் கலந்துகொண்டதுடன் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன அவர்களும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களும் பதிவாளர் எச்.எம்.ஏ.சத்தார் அவர்களும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மூதவை உறுப்பினர்களும் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி சபீனா இம்தியாஸ், பிரயோக விஞ்ஞான பீட சிரேஷ்ட பிரதிப்பதிவாளர் பீ.எம்.முபீன்  மற்றும் திணைக்களத்தலைவர்கள் விரிவுரையாளர்கள் கல்விசாரா ஊழியர்களும் கலந்து கொண்டனர்.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களுக்கு ரூபா 131 மில்லியனில் விடுதிக் கட்டிடத் தொகுதி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top