• Latest News

    April 05, 2014

    மக்கள் மனங்கவர்ந்த பொலிஸ் அத்தியட்சகர் H.L.ஜமால்தீன் M.A, J.P.

    மருதமுனை மக்களினதும்; இப்பிரதேச மக்களினதும் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்த மருதமுனை மண்ணின் பெருமை காத்த மகன், பொலிஸ் அத்தியட்சகர்  H.L.ஜமால்தீன் அவர்களின் 05வது நினைவு தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் கட்டுரை.

    01.03.1955 இல் ஹாமீது லெவ்வை சீனத்தும்மா தம்பதிகளின நான்காவது மகனாகப் பிறந்த ஜமால்தீன் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலத்திலும்  இடைநிலைக் கல்வியை மருதமுனை அல்-மனார் மகா வித்தியாயத்திலும் உயர் கல்வியை கல்முனை உவெஸ்லி உயர் தரப் பாடசாலையிலும் யாழ்ப்பாணம் இளவாலை சென் ஹென்றிக் கல்லூரியிலும் கல்வி கற்றார்.
    தனது இளமைக்காலத்திலேயே விளையாட்டுத் துறையில் மிகுந்த ஈடுபாடு காட்டி துடிப்புடன் செயற்பட்டு பல சாதனைகளை நிலை நாட்டிய  ஜமால்தீன் அவர்கள் உதைபந்தாட்டத் துறையில் மிகுந்த ஆர்வமாக ஈடுபட்டார். இதன் காரணமாக யாழ்ப்பாணம் இளவாலை சென் ஹென்றிக் கல்லூரி அதிபரினதும் கல்முனை உவெஸ்லி உயர் தரப் பாடசாலை அதிபரினதும் வேண்டுகோளினை ஏற்று சென் ஹென்றிக் கல்லூரியில் உயர் கல்வி கற்கச் சென்றதோடு அக்கல்லூரி உதைபந்தாட்டக் குழுவிலும் இணைந்து கொண்டார். 1975 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயது அகில இலங்கை பாடசாலை மட்ட உதைபந்தாந்தப் போட்டியில் கல்லூரியின் சார்பாக துடிப்புடன் இலாவகமாக விளையாடி அக்கல்லூரி அகில இலங்கை ரீதியாக சம்பியனாக தெரிவு செய்யப்பட ஒத்துழைத்ததோடு அப் போட்டிகளின் சிறந்த வீரன் எனும் பட்டத்தை வென்று தங்கப் பதக்கம் சூட்டி கௌரவிக்கப்பட்டார். அதன் மூலம் அக்கல்லூரியும் எமது மருதமுனை மண்ணும் பெருமிதம் கண்டது.

    1975 இல் ஆசிரியப் பணியில் இணைந்து கொண்ட ஜமால்தீன் அவர்கள் தனது பட்டப்படிப்பினை 1977 இல் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மேற்கொண்டார். 1980 இல் தனது பட்டப்படிப்பினை முடித்துக் கொண்ட ஜமால்தீன் அவர்கள் அதே ஆண்டு பொலிஸ் திணைக்களத்தில் உதவிப் பொலிஸ் பரிசோதகராக இணைந்து கொண்டார்.அதே ஆண்டு நீதிமன்றத் தீர்ப்புக்கிணங்க பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்;த்தப்பட்டார் 1980 தொடக்கம் 1985 வரை சிறி லங்கா பொலிஸ் உதைபந்தாந்தாட்டக் குழுவில் இடம் பெற்றிருந்தார்.

    பொலிஸ் பரிசோதகராகவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகவும் தலை மன்னார், மன்னார், மொனாகலை, நானுஓயா, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, மட்டக்களப்பு, வாழைச்சேனை, களுவாஞ்சிகுடி, கல்முனை போன்ற இடங்களில் கடமையாற்றி அப்பிரதேச மக்களின் பெருநன்மதிப்பினையும் தனதாக்கிக் கொண்டார்.

    1984ஆம் ஆண்டு நடந்தேறிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்கான போட்டிப் பரீட்சையில் ஜமால்தீன் அவர்கள் சித்தியெய்தியும் அப்பதவியுயர்வு அவருக்கு வழங்கப்படவில்லை. மீண்டும் 1998 ஆம் ஆண்டு அப்பரீட்சைக்கு தோற்றி சித்தியெய்தினார். 1997 ஆம் ஆண்டு அவர் தொடர்ந்த மனித உரிமை மீறல் வழக்கின் மூலமாக ஜமால்தீன் அவர்களுக்கு 2001 ஆண்டு உயர் நீதிமன்றத்தினால் 31.05.2001ஆம் திகதி தொடக்கம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பதவி உயர்வு  வழங்கப்பட வேண்டுமென்ற  சாதகமான தீர்ப்புக் கிடைத்தது. அதற்கிணங்க பொலிஸ் தலைமையகத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகராக தன் கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின் வாழைச்சேனை, களுவாஞ்சிகுடி, கல்முனை போன்ற பிரதேசங்களில் உதவி பொலிஸ் அத்தியட்சகராக 06.06.2007 வரை தன் ஆளுமையை வெளிப்படுத்தி சிறப்பான சேவை செய்தார்.

    2007 ஆம் ஆண்டு பொது நிர்வாகத் துறையில் முதுமானிப்பட்டத்தை பெற்றுக் கொண்டு ஜமால்தீன் அவர்களை அவர் தன் சிறப்பான செயற்பாடு, சிறந்த நிர்வாக ஆளுமை கண்டு 07.06.2007 ஆம் திகதி தொடக்கம் பொலிஸ் அத்தியட்சகராக சிறி லங்கா பொலிஸ் திணைக்களம் பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்தியது. பொலிஸ் தலைமையகத்தில் தனது கடமையினைப் பொறுப்பெடுத்து செயற்பட்டார்.  பிற்பாடு கல்லடி, மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பிரதி இயக்குனராக 10.11. 2007 இல் நியமிக்கப்பட்டார்.

    தனது சேவைக் காலத்தில் கடiயாற்ற்pய பிரதேசங்களில் சாதி, சமய, பிரதேச வேறுபாடுகளைக் களைந்து அப்பிரதேசங்களில் ஒருமுகப்படுத்தப்பட்ட சுமூக நிலையைத் தோற்றுவிக்க அயராது பாடுபட்டார். பயங்கரவாத சூழல் நிலவிய காலகட்டத்தில் தான் கடமையாற்றிய பிரதேசங்களின் மதத் தலைவர்களினதும் கல்விமான்களின்தும் அனுசரணையுடன் செயற்பட்டு ஒட்டு மொத்த மக்களும் சுமுகமாக வாழ வழி சமைத்தார். இன்றும் அம்மக்கள்  ஜமால்தீன் அவர்களின் சீரிய சிந்தனைச் செயற்பாட்டை நினைவு கூருகின்றனர்.

    பொலிஸ் துறையில் தனது ஆளுமையான செற்பாட்;டைச் செய்து தனக்கென ஓர் இடத்தை மக்கள் மத்தியிலும் பொலிஸ் திணைக்களத்திலும் முத்திரை பதித்தது போல்  கல்வி, விளையாட்டு மற்றும் பொதுப்பணியிலும் தனது தூரநோக்கான சிந்தனையுடன் திடமாக செயற்பட்டார்.

    பாண்டிருப்பு முஸ்லிம் பிரிவு மக்களின் நன்மை கருதி உருவாக்கப்பட்ட மஸ்ஜிதுன் மினன் பள்ளிவாசல் உருவாக்கத்திலிலும் அதன் வளர்சியிலும் முக்கிய பங்காற்றினார். மஸ்ஜிதுல் கபீர் பள்ளிவாசல் டிரஸ்டியாக  செயற்பட்டதோடு அதன் தலைவராக பதவியேற்றதன் பின்   பள்ளிவாசல் புதிய கட்டட நிர்மாணத்தில் கூடுதல் கரிசனை கொண்டு செற்பட்டு மக்கள் மத வழிபாடுகளை செய்வதற்காக கட்டடத்தின் ஒரு பகுதியை துரிதமாக நிர்மாணித்தார். அத்தோடு மஸ்ஜிதுல் கபீர் புதிய சந்தைக் கட்டடத்தையும் உருவாக்கினார்.

    கல்முனையில் உதைபந்தாட்டத்துறையை வளர்ப்பதிலும் மேம்படுத்துவதிலும் முழுமூச்சுடன் ஈடுபாடு காட்டிய ஜமால்தீன் கல்முனை விளையாட்டுக்கழகத்தின் முக்கிமான உறுப்பினராக செயற்பட்டு அக்கழகத்தை ஜனரஞ்சகப்படுத்தினார். அதன்பின் மருதமுனையில் மங்கிப்போயிருந்த உதைபந்தாட்டத்துறையை மேம்படுத்த மருதமுனை ஈஸ்டன் விளையாட்டுக்                                                                              கழகத்துடன் இணைந்து செயற்பட்டார். மருதமுனையில் உதைபந்தாட்டத் துறையை மேம்படுத்து முகமாக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார். அதன் நிமித்தமாக பருதமுனையில் உள்ள விளையாட்டுக் கழகங்களை இணைத்து மருதமுனை உதைபந்தாட்டச் லீக்கை உருவாக்கினார்;.  1994 தொடக்கம் அம்பாரை மாவட்ட உதைபந்தாட்டச் சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இவர் தலைவராக செயற்பட்ட காலத்தில் அம்பாரை மாவட்ட உதைபந்தாட்டச் சங்கம் நாடளாவிய ரீதியில் பிரபல்யமானதோடு நாடளாவிய ரீதியில் பல வெற்றிகளையும் தனதாக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது. சுனாமி பேரழிவில் அழிவடைந்த  மருதமுனை மகூ10ர் மௌலானா விளையாட்டு மைதானத்தை அகில அலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்துடன் இணைந்து அபிவிருத்தி செய்தார். மகூ10ர் மௌலானா விளையாட்டு மைதானம் தற்போது புதுப்பொலிவுடன் திகழ்வதற்கு ஜமால்தீனின் பங்களிப்பு மறக்கமுடியாதது என்பது குறிப்பிடத்தக்கது.

    மருதமுனைக் கல்வி வரலாற்றில் ஷம்ஸ் மத்திய கல்லூரியின் உருவாக்கம் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது என்பது வரலாற்ற உண்மை. சூறாவளி அழிவின் பின் இக்கல்லூரியினை உயர்நிலைப்படுத்துவதில் முக்கிய பங்காளனாக செயற்பட்டார். இக்கல்லூhரி சுனாமியின் தாக்கத்தினால் அழிவுற்றவேளை புதிய இடத்தில் புததெழுச்சியாக மீள் நிர்மாணம் செய்வதில் தனது பூரண பங்களிப்பினை வழங்கியமை என்றும் நினைவு கூரத்தக்கது.

    மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக் கழகத்தினை கல்வியின் பால் செயற்பட தூண்டியதோடு; 2003ம் தொடக்கம் ஆண்டு தோறும் 5ம்; ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கு பரிசில்களும் பண ஊக்குவிப்புககளையும்  வழங்குவதற்கு காரணமாகச் செயற்பட்டார். பிற்காலத்தில் அச்செயற்பாடு பாண்டிருப்பு, பெரியநீலாவணை தமிழ் மாணவர்களும் பயன்பெற விஸ்தரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இன, பிரதேச நல்லுறவுகளை பேணி வளர்ப்பதில் பெரும் பங்காற்றிய ஜமால்தீன் அவர்கள்  பலதரப்பட்ட பொதுப்பணிக் கழகங்களின் தலைவராக செயற்பட்டு பொதுப்பணிகளில் ஈடுபட்டார்.

    இவர் தனது கல்வியை தொடர்சியாக வளர்த்துக் கொள்வதில் மிகுந்து ஈடுபாடு காட்டினார். அவர் பெற்றுக்கொணட மேலதிக கல்விகளும் பட்டங்களும் பின்வருமாறு.

       
    1. Medcal Prractitioner Certificate in Homepathic Medical in 1999.

    2. Diploma Cours on Human Rights in 2003.

    3. Hostage Negotiation Course at United Stated of Ameria in 2006.

    4. Natinal Training Course on Puplic Health Emergence Disaster Managment        Faculty of Medicine - University of Perdeniya in 2006 December.                          
    5. Certificate of Appreciation by Embasy of U.S.A. Colombo, Sri Lanka in  2007.
                       
    திடமான தூர நோக்குடன் சிந்திதித்து செயற்படும் ஜமால்தீன் அவர்கள் உயர் பதவிகளில் இருந்தபோதிலும் பணிவு கொண்டு எல்லோருடனும் நட்புடன் உதவும் பண்புகளுடன் செயற்பட்டார். மருதமுனைக் கிராமத்தின் அனைத்து வளர்சியிலும் இணைந்து செயலாற்றினார். இப்பிரதேச மக்களின் மனங்கவர் பண்பாளனாக இன்றும் நிலைத்திருக்கிறார். அன்னாரின் இழப்பு மருதமுனை மக்களிற்கும் இப்பிரதேச மக்களுக்கும் பேரிழப்பாகும் என்றால் மிகையாது. அன்னாரின் மண்ணறை வாழ்கை மிகுந்த விசாலமாக திகழ இறைவனைப் பிரார்த்திப்பதோடு. அன்னாருக்கு 'பிர்தௌஸ்' என்னும் சுவர்க்கம் கிடைக்க பிரார்த்திப்போம். வஸ்ஸலாம்.

    N.M.M.இஸ்மாயில் B.A, J.P




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மக்கள் மனங்கவர்ந்த பொலிஸ் அத்தியட்சகர் H.L.ஜமால்தீன் M.A, J.P. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top