T20 உலக சம்பியன் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவரையும், T20 உலக சம்பியன் (பெண்கள் அணி) போட்டியில் அவுஸ்ரேலியா மூன்றாது தடவையும் வெற்றி கொண்டு ஹெற்றிக் சாதனை படைத்ததுள்ளது.
இலங்கையின் தலைவரும், அவுஸ்ரேலியாவின் பெண்கள் அணியின் தலைவியும் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள்
T20 உலக மகளிர் கிண்ண இறுதி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
டாக்காவில் நடைபெற்ற டி20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.
முதலில் நாணயசுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ஓட்டங்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 106 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 15.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 109 ஓட்டங்கள் எடுத்து மகளிர் உலகக்கிண்ணத்தை வென்றது.

0 comments:
Post a Comment