எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்;
சாய்ந்தமருது பிரதேசத்தில் சுகாதாரத்துக்கு
மிகுந்த அச்சுறுத்தலாக இருந்த இவ்வூரை ஊடறுத்துச்செல்லும் தோணா, மக்களின் நீண்டகால
வேண்டுதலின் பின்னர் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் உலக சமாதான
அமைப்பின் இலங்கைக்கான தூதுவருமான ஏ.எம்.ஜெமீல் அவர்களின்
முயற்சியாலும் கல்முனை மாநகரசபை முதல்வர் நிஸாம் காரியப்பர் அவர்களது
அனுசரணையுடனும் கரையோர பாதுகாப்பு அமைச்சின் நிதியுதவியுடனும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அம்பாறை
மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜசூர் அவர்களது நேரடி கண்காணிப்பிலும் தற்போது சுத்தமாக்கப்பட்டு வருகின்றது.
இக்குழுவினர் சட்டவிரோதமாக தோணாவுடன்
இணைக்கப்பட்டுள்ள கழிவு நீர் குழாய்களை அகற்றுமாறு சம்மந்தப்பட்டவர்களுக்கு
உத்தரவுகளை பிறப்பித்தனர்.
0 comments:
Post a Comment