• Latest News

    May 30, 2014

    ஹக்கிமும் ஒப்பாரியும்

    எஸ்.அஷ்ரப்கான்;
    அரசாங்கம் முஸ்லிம்களை ஓரம் கட்டுகிறது என ஒப்பாரி வைத்துக்கொண்டே அரசாங்கம் சிறந்தது என பாராளுமன்றத்தில் வாக்களித்ததன் மூலம் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களை முட்டாள்களாக நினைத்துக்கொண்டு செயற்படுகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

    இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,

    அரசாங்கத்தின் போதைபொருளுக்கு ஆதரவான நிலைப்பாட்டுக்கெதிராக ஐ. தே.கவினால் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணiயின் போது அரசாங்கத்தின் போதைக்கு ஆதரவான  நிலைப்பாட்டை ரஊப் ஹக்கீம் பாராட்டிப்பேசியுள்ளார். குர்ஆன் ஹதீதே தமது யாப்பு என சொல்லிக்கொள்ளும் ஒரு கட்சி இவ்வாறு பேசியிருப்பது அருவருப்பானதாகும்.
    இந்த ஆட்சியில் முஸ்லிம்கள் பல பிரச்சினைகளை எதிர் நோக்குவதாகவும் அதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று பட வேண்டும் என்றும் இவர்களின் கையொப்பம் இட்டு ஏதோ எங்கோ இருக்கும் ஐ.நா சபைக்கு கடிதம் எழுதுவது போல் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும்  சொல்லிக்கொள்ளும் இவர்கள் ஐ.தே. கவில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து அரசுக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்ட போது அந்த முஸ்லிம் உறுப்பினர்களுடன் ஒற்றுமைப்பட்டு அரசுக்கு எதிராக வாக்களிக்க முஸ்லிம் காங்கிரசாலும் ஏனைய காங்கிரஸ்களாலம் முடியாமல் போனது ஏன்?

    முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று பட வேண்டும் என கூறுபவர்கள்  எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஒன்று படாமல் அநியாய ஆட்சி நடத்தும் அரசை நல்லாட்சி என ஆதரித்து வாக்களிப்பதில் அரக்கு ஜால்ரா அடிப்போர் ஒன்றுபட்டுள்ளதன் மூலம் முஸ்லிம்களை முட்டாள்கள் என நினைத்துக்கொண்டு ஏமாற்றுகிறார்கள். இதற்குப்பின்னர் எதிர் கட்சிகளையும் சார்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மோடு ஒன்று பட வேண்டும் என சொல்வதற்கு முஸ்லிம் காங்கிரசுக்கு இனி எந்தத்தகுதியும் இல்லை என கூறி வைக்கிறோம்.

    ஜனாதிபதியை சந்திக்க கடிதம் எழுதியுள்ளோம் எனவும், அரசாங்கம் முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்கிறது என பொதுமக்கள் மத்தியிலும், அடிக்கடி அறிக்கை விடும் மு. கா செயலாளர் ஹசனலி அரசாங்கம் சிறந்தது என பாராளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துள்ளதன் மூலம் இவரும் முஸ்லிம்களை நன்றாகவே ஏமாற்ற பழகி விட்டார் என தெரிகிறது.

     ஆகவே பொது மக்கள் மத்தியில் அரசின் நடவடிக்கைளில் அதிருப்தி கண்டவர்கள் போலும் பாராளுமன்றத்தில் அரசின் அடிமைகளாகவும் செயற்படும் இத்தகைய முஸ்லிம் கட்சிகளின் செயல்கள் பகிரங்கமாக கண்டிக்கப்பட வேண்டியவையாகும். இத்தகைய கோமாளித்தனமான அமைச்சர்களாலும், பாராளுமன்ற உறுப்பினர்களாலும் இன்று முஸ்லிம் சமூகம் வெட்கித்தலை குனிந்துள்ளது.  ஆக பாராளுமன்ற பகிஷ்கரிப்பு கோரிக்கை, முஸ்லிம் எம்பீக்களின் ஜனாதிபதிக்கான  கடிதம் என அனைத்தும் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றுவதற்காக ஆடும் நாடகம் மற்றும் பொய், ஏமாற்று என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் பாவம் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்குத்தான் இவை இன்னமும் புரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஹக்கிமும் ஒப்பாரியும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top