• Latest News

    May 13, 2014

    சார்க் இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுலைமான் ஷாபி மாலைதீவு பயணமானார்.

    மாலைதீவில் " அமீர் அகமட் மாகு " நகரத்தில் 11.05.2014 ஆரம்பமான சார்க் இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நிந்தவூர் நெஸ்கோ இளைஞர் கழகத்தின் தலைவரும், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடக மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான சுலைமான் ஷாபி மாலைதீவு நோக்கி பயணமானார்.  

    இம் மகாநாட்டில் சார்க் நாடுகளை உள்ளடக்கிய நாடுகளின் இளைஞர், யுவதிகள் தற்போது எதிர் நோக்கும் முக்கிய சவால்களான கல்வி, சுகாதாரம், தொழில் வாய்ப்புக்கள், ஆண் , பெண் சமத்துவம், சூழல் பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஐந்து விடயங்களில் கலந்துரையாடவுள்ளனர்


    இந்த நிகழ்வில் இலங்கைக்கான சார்க் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் திருமதி. R.D. ராஜபக்ஸ  இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. நிலாந்தி சுகததாச , மற்றும் இளைஞர் பாராளுமன்ற செனட் உறுப்பினர் துலாஞ்சலி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். 

    மேலும் இம் மகாநாடானது எதிர்வரும் 15ம் திகதி நிறைவுபெறவுள்ளது. இதேவேளை பாராளுமன்ற அமைச்சர் சுலைமான் ஷாபி நிந்தவூர் பிரதேச சபையின் எதிர்கட்சித்தலைவர் வை.எல். சுலைமாலெவ்வை அவர்களின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சார்க் இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுலைமான் ஷாபி மாலைதீவு பயணமானார். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top