• Latest News

    May 18, 2014

    உறவுகளை கட்டியெழுப்ப வேண்டும்: முபாரக் அப்துல் மஜீத்

    ஏ.எம். ஹூசைனி;
    பொதுவாக நமது சமூகத்தின் உறவுகளை பார்க்கும் போது பெரும் பாலும் தந்தையுடன் அல்லது தாயின் உறவுடன் உறவுகள் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. பாட்டனின் உறவுகள் நமக்குத் தெரிவதில்லை என்று முபாறக் அப்துல் மஜீட் தெரிவித்தார்.

    பிஸ்மில்லா நலன்புரி சங்கத்தின் அங்கத்தவர்  கூட்டம் கல்முனை செயிலான் வீதியில் கடந்த (16) வெள்ளி மாலை 4.45க்கு ஆரம்பமானது. கூட்டத்தை ஆரம்பித்து வைத்து தலைமையுரையாற்றிய மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்,
    இப்போதுள்ள உறவு முறை நடைமுறையை  மாற்றியமைத்து தலை முறை தலை முறையாக அனைத்து சொந்தங்களுக்குமிடையில் உறவைக்கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எமது இலட்சியமாகும்.

    இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டாவது தலைமுறையில் நாம் வாழுகின்றோம். இந்த சங்கத்தை ஆரம்பிக்கும் போது நாம் என்ன வயதில் இருந்தோமோ அந்த வயதில் நமது பிள்ளைகள் இதன் அங்கத்தவர்களாக இப்போது உள்ளார்கள். இறைவன் நாடினால் நமது பேரப்பிள்ளைகள் காலத்திலும் இது தொடர்ந்தால் நிச்சயம் நமது உறவுகள் மத்தியிலான ஒற்றுமைப்பாலம் தொடரும்.

    இந்தச்சங்கத்தின் மூலம் அது ஓரளவு நிறைவேறுகின்றது. நமது ஊரை பொறுத்த வரை உறவுகளிடம் செல்லும் போது கூட செப்பு அதாவது ஏதாவது பொட்டலம் கட்டிக்கொண்டுதான் செல்வார்கள். செப்புப்பெட்டி கட்ட பணம் இல்லையென்றால் உறவுகளுடன் தொடர்பும் இல்லை. இதனை போக்கி ஏழை எளியோர் என்ற பேதம் ஒழிக்கப்பட வேண்டும்  என்ற பிஸ்மில்லா ஹாஜியாரின் சிந்தனையின் படி இந்தச்சங்கத்தை கொண்டு செல்லும் நாம் இதன் கூட்டங்களை ஒவ்வொருவரின் வீடுகளிலும் நடத்துவதால் அந்த வீட்டிற்கு அனைத்து உறவுகளும் எந்த செப்புப் பெட்டியும் இல்லாமல் அதாவது கூச்சமின்றி செல்லும் நிலையை உருவாக்கியுள்ளோம். இது எமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியும்இ மரபு வழிநடத்தை மாற்றமுமாகும்.

    இந்த சங்கத்தை பொறுத்த வரை எமது சொந்தம் என வாசனை வீசினாலேயே போதும் அவரை நாம் உள்வாங்கிக்கொள்வோம். வாசம் என்பதன் பொருளை நீங்கள் விளங்கியிருப்பீர்கள். மனிதர்கள் பணத்துக்காக பதவிக்காக ஒன்று படுகிறார்கள். நாங்கள் அள்ளாஹ்வுக்காகவே இங்கே ஒன்று சேர்ந்துள்ளோம். அள்ளாஹ்வுக்காக ஒன்று சேரும் கூட்டத்துக்கு இறைவன் நன்மை அளிக்கிறான் என்பதை ஹதீதுகள் உறுதிப்படுத்துகின்றன.

    இந்தக்குடும்பத்தில் நான் மௌலவியாக இருப்பதால் என்மீது இதன் தலைமைப்பொறுப்பை சாட்டிவிட்டார்கள். எனக்கு அடுத்ததாக ஹாறூன் மௌலவியே இருக்கின்றார். அதற்குப்பின் யாரையும் காணவில்லை. எனக்கும் வயதாகிறது. ஆதலால் உங்கள் குடும்பத்தில் ஒருவரையாவது மௌலவியாவதற்கு படிப்பிக்க முயற்சி செய்யுங்கள். மௌலவிக்கு படிப்பவர் ஒரு போதும் வாழ்வில் சீரழிய மாட்டார். நானும் ஹாறூனும் இறைவன் உதவியால் படிப்பிலும், பொருளாதாரத்திலும் நன்றாகத்தான் இருக்கிறோம். அதனால் இறைவனுக்காக உங்களின் ஒரு பிள்ளையையாயினும் அறபு மதுரசாவுக்கு அனுப்ப முயற்சி எடுங்கள் என்றார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உறவுகளை கட்டியெழுப்ப வேண்டும்: முபாரக் அப்துல் மஜீத் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top