கடந்த 26ம் திகதி எகிப்திய ஜனாதிபதித் தேர்தல்இரண்டு தினங்கள்
இடம்பெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில்வாக்காளர்கள் மிக குறைந்த நிலையில்
வாக்களித்ததன் காரணமாக மூன்று தினங்களாக மாற்றப்பட்டுள்ளதாக இராணுவ அரசு
அறிவித்தது .
இதனைத் தொடர்ந்து வாக்களிப்பு நிலையங்கள்
திறக்கப்பட்ட போதிலும் மக்கள் வாக்களிக்கவில்லை கடந்த ஆண்டு எகிப்த்தில்
இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலில் அழ இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தை பிரதி
நிதித்துவப்படுத்தும் கலாநிதி முஹமத் முர்சி பெரும் பான்மை
வாக்குகளைப்பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் .
வளைகுடா பிராந்தியத்தில் செல்வாக்கு மிக்க ஜனாதிபதியாகவும் வளர்ச்சி
கண்டார் எகிப்த்திய பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கான முதற்கட்ட
நடவடிக்கையாக துறைசார் நிபுணர்களை அமைச்சர்களாக நியமித்தார் .
இவரது இஸ்லாமிய முன்மாதிரி ஆட்சியை பொறுத்துக்கொள்ள முடியாத மேற்கேத்தேய
நாடுகள்இஸ்ரேல் கூட்டிணைந்து அவர்களின் கைபொம்மைகளாக செய்யட்பட்டுவரும்
அரபு உலக ஆட்சியாளர்களை பயன்படுத்தி எகிப்த்தில் இஹ்வாங்களுடன் பங்காளி
கட்சியாக செய்யட்பட்டு வந்த அந்நூர் கட்சியினரும் இராணுவமும் கூட்டிணைந்து
ஒரு இஸ்லாமிய சனநாயக ஆட்சிக்கெதிராக சதி முயற்ச்சியில் இரகசியமாக ஈடுபட்டு
இராணுவத்தளபதி சீசீ யை பயன்படுத்தி முர்சீயை அட்சியில்லிருந்து தூக்கி
எறிந்ததோடு அவரையும் அவரை சார்ந்த இயக்கத்தையும் தடை செய்தனர் .
இதனை எதிர்த்து எகிப்திய மக்கள் இன்று வரை தெருக்களில் இறங்கி தமது
உரிமைக்காக போராடி வரும் நிலையில் இருபதுநாயிரம் பேர் கைது
செய்யப்பட்டுள்ளதுடன் ஐயாயிரம் பேர்வரை இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட
நிலையில் சீசீ தலைமையிலான இராணுவ அரசு ஜனாதிபதி தேர்தலை அறிவித்தது.
இதனை தொடர்ந்து நேற்று முன் தினம் (28.05.2014) இடம்பெற்ற தேர்தலில் எழுபத்தி ஐயிந்து
சதவிகிதமான மக்கள் வாக்களிக்காமல் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளதோடு பல
பிரதேசங்களில் எதிர்ப்புப் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இத்தேர்தலில் இராணுவத்தரப்பால் பல மோசடிகள் இடம் பெற்றதற்கான வீடியோ
ஆதாரங்களும் வெளியாகியுள்ளன இத்தேர்தல் அந்நூர் சலபீக்களுக்கு சவூமணி
அடித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்
0 comments:
Post a Comment