• Latest News

    May 30, 2014

    சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள்

    சீதாபழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகள் கொண்டது. சீதாப்பழத்தில் நீர்சத்து அதிகமாக உள்ளது.  மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார் சத்து, சுண்ணாம்புசத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தைகையை சத்துகள் சீதாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.
    சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு  சக்தியை அதிகரிக்கும். சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர்  மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமாஇ காசநோய் கட்டுப்படும்.

    சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும். சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப்  போக்கை கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.

    * சீதாப்பழத்தை சாப்பிட்டால் செரிமானம் ஏற்படும்.
    * சீதாப்பழ சதையோடு உப்பை கலந்து முகப்பரு மேல் தடவினால் முகப்பரு      பழுத்து உடைந்து மறையும்.
    * இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டால் புண்கள் ஆறும்.
    * விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறு பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி மிருதுவாகும்.
    * சீதாப்பழம் காய்ச்சலை குணப்படுத்தும்
    * சீதாப்பழம் விதைகளை பொடியாக்கி கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வந்தால் முடி  உதிராது.
    * சிறுவர்களுக்கு சீதாப்பழம் சாப்பிட்டால் எலும்பு உறுதியாகும்.
    * சீதாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலப்படும்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top