• Latest News

    May 30, 2014

    மாவனெல்லை தாருல் ஹிக்மா மஸ்ஜித்தை மூடுமாறு அச்சுறுத்தல்

    மாவனெல்லை- ஹெம்மாத்தகம வீதியிலுள்ள ஹெரமினியா தாருல் ஹிக்மா பள்ளிவாசலினை மூடுமாறு பொதுபலசேனா அச்சுறுத்தல் விடுத்ததாக  குறித்த பள்ளிவாசலின் நிர்வாகம்   தெரிவித்துள்ளதாக மாவனெல்லை தகவல்கள் குறிப்பிடுகிறது .

    இன்று மாலை ஐந்து மணியளவில் குறித்த பள்ளிவாசலுக்கு விஜயம் செய்துள்ள பொதுபலசேனாவின் மாவனல்ல பிரதேச அமைப்பாளரான  அல்பிட்டிய விகாரையின் பிரதான விகாராதிபதி மெதிரிகிரிய புன்கசர தேரர் தலைமையிலான குழுவினர் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது .

    இந்த பள்ளிவாசல் சட்டவிரோதமானது என தெரிவித்து மெதிரிகிரியபுன்கசர தேரர் ஏற்கனவே மாவனல்லை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த  நிலையில் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது .

    குறித்த பள்ளிவாசல் சட்ட ரீதியானது என்பதை நிரூபிக்கும் சான்றுகளை ஏற்கனவே நிர்வாகம் எபொலிஸாரிடம் சமர்ப்பித்துள்ளனர். என்பதுடன் இந்த மஸ்ஜித் நாட்டின் சட்ட ரீதியாக இயங்கி வருவதாகவும் நிர்வாகத்தினர்  தெரிவித்துள்ளனர்

    இன்று இடம்பெற்ற இந்த அச்சுறுத்தல் சம்பவம் குறித்து மானவல்லை பொலிஸ் நிலையத்தில் மஸ்ஜித் நிர்வாகத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மாவனெல்லை தாருல் ஹிக்மா மஸ்ஜித்தை மூடுமாறு அச்சுறுத்தல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top