அஸ்ரப் ஏ சமத்:
கிழக்கு
மாகாணத்தின் அடுத்த 2 ஆண்டுகளுக்கான முதலமைச்சர் பதவி முஸ்லிம்
காங்கிரசுடன் அரசு செய்து கொண்ட ஒப்பந்தப்படி முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கே
அப்பதவி வழங்கப்பட வேண்டும். என அக் கட்சியின் உப தலைவரும்,
கிழக்கு மாகண அமைச்சருமான ஹாபீஸ் நசீர் அஹமட் ஊடகங்களுக்கு விடுத்துள்ள
அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அப் பதவியாருக்கு வழங்கவேண்டு மென்றும்
என்பதை முஸ்லிம் காங்கிரசின் அதி உயர்பீடமும், முஸ்லிம் காங்கிரஸின்
தலைவருமே தீர்மாணிப்பார்கள். எனவும் அவர் உறுதிபட தெரிவித்தார்.
கிழக்கு முதலமைச்சா பதவி சம்பந்தமாக ஊடகங்களில் பல் வேறுபட்ட ஊகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் எவ்வித உண்மையுமில்லை. நாம் கிழக்கு மாகாணசபையில் பங்காளிக் கட்சியாகயாகவும் அதன் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாகவே உள்ளோம். எனவே வேறுஎந்தக் கட்சிகளும இப் பதவிக்கு இங்கு உரிமை கூறமுடியாது. கிழக்கு மாகண சபைத் தேர்தலின்போது ஜக்கியமக்கள் சுதந்திர முன்னணிக் கட்சியில் வெற்றிலைச் சின்னத்தின் சார்பில் போட்டியிட்டவர்களின் சார்பில் ஏற்கணவே முதலமைச்சராக நஜீப் ஏ மஜீத் பதவி வகித்துவருகின்றார். அடுத்து மரச்சின்னத்தில் தனித்து போட்டியிட்ட முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்கு இப் பதவி வழங்கப்படும். இப் பதவி சம்பந்தமாக வேறு கட்சிகளுக்கும் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் சமுக நலனைமையமாகக்
கொண்டு தொழிற்படுகின்றது. எனவே எந்த முடிபுகளும் முஸ்லிம் சமுகத்தின்
நலனைக் கொண்டே எடுக்கப்படும். தணிப்பட்டவர்களின் அபிலாசைகளை
பூர்த்திசெய்யும் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் இயங்காது. என ஹாபீஸ் நசிர்
அஹமட் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment