• Latest News

    May 29, 2014

    சகுனி ஆட்டமும் அதாவுல்லாவும்!

    ஆதம்பாவா வக்கீர் ஹுசைன் – நிந்தவூரில் இருந்து
    உங்களின் இனிய இசை கச்சேரிகளை கேட்டும் கண்டும் அதிலும் குறிப்பாக நீங்கள் அந்த பெண் ஒருவருடன் சேர்ந்து படித்த டூயட் பாடல் இன்னும் என் காதுகளில் கொசுவின் ரீங்காரமாய் ஒலித்து கொண்டே இருப்பதை எண்ணி நான் எதனை முறை வெக்கப்பட்டுள்ளேன்...ஆஹா என்ன பிரமாதம்.....
    அடடா. ....இந்த மிகவும் முக்கியமான உங்கள் பணியின் மத்தியிலும் நீங்கள் பகுதி நேர பணியாக ஒரு அரசியல் வாதியாக இருப்பது குறித்து சற்று முன்னர் தான் கேள்விபட்டேன்....அது முதல் என்னால் இருப்பு கொள்ள முடியவில்லை.....பொதுவாக இந்தியாவில் தான் கூத்தாடிகள் எண்டு சொல்லப்படும் , நடிகர்கள், பாடகர்கள் அரசியலுக்கு வந்து அதை நாசம் பண்ணுவது ....இந்த வகையில் நீங்கள் தான் ஒரு சிறந்த பாடகானாக இருந்து அரசியலுக்கு வந்து ஒரு சிறந்த தொடக்கத்தை அளித்துள்ளீர்கள் போலும்.......பலே பலே ......
     

    இலங்கை முஸ்லிம் அரசியலில் உங்களின் பங்களிப்பு மிகவும் அபரிதமானது என்பதை நீங்கள் கட்டி முடித்த பல ஜடப்பொருட்களான கட்டிடம்கள் சாட்சி கூறினாலும் அவை எல்லாவற்றையும் தாண்டி உங்களை நான் ஒரு அரசியல் வாதி என்பதாகு அப்பால் முஸ்லிம் அரசியல் வியாதி என்றே அடிக்கடி நினைவு கூர்ந்தது உண்டு .....பாவப்பட்ட ஜென்மம் நாங்கள் வேறு என்ன நினைக்க முடியும் அதற்கு அப்பால் ......
    தற்போதைய இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்புகளின் போது உங்களை மற்ற அரசியல் வியாதிகள் போன்று விமர்சிக்கபடுவதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு எப்போதுமே உண்டு, அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.....களத்தில் நிற்பவனே கல்லடி படுவான் என்பதற்கு ஏற்ப அது இருந்தாலும் வரலாறு என்றைக்குமே உங்களை மன்னிக்காது.
    பலர் உங்களை கண்டு பாம்பை கண்ட படை போல நடுங்கினாலும் அந்த பூ மாளிகையில் உங்கள் தொடை நடுங்கவது இங்கு யாருக்கு தெரியும் அல்லது தெரியப்போகின்றது.
     இங்கு எனது மட்டுமல்ல, பலரினதும் ஏன், உங்களுக்கு நல்ல மற்றும்  வாக்கு போட்ட உங்கள் ஆதரவாளர்களினதும் ஆதங்கம் என்ன வெனில் உங்களின் சமூகத்தின் மீதான அக்கறை அல்லது பங்களிப்பு வெறும் செங்கல் , மண் மற்றும் concrete உடன் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதுதான். இருந்தும் நீங்கள் அரசியலில் பழம் தின்று இன்னும் கொட்டை போடாததுதான் மிச்சம் என்றாலும் உங்களின் சகுனி ஆட்டம்கள் நிறையவே தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அதற்கு சமீபத்திய கல்முனை மேயரின் குளறுபடிகளின் போது கானக்கிடைத்ததே சான்று .
     இவற்றையெல்லாம் விட்டு விடுவோம், அது உங்கள் அரசியல் இருப்பு சார்ந்த போராட்டம். ஆனால் உங்களுக்கென்று சமூகத்தின் உரிமை பற்றியும், ஏன் அதன் இருப்பு பற்றியும் ஒரு பாரிய பொறுப்பு இல்லாமல் இல்லை. மக்களை மகிழ்ச்சிப்படுத்த இங்கு இசை நிகழ்சிகளும் , அதில் உங்கள் பாடல்களும் தேவை இல்லை. இங்கு தேவை ஒரு நிரந்தர நிம்மதியுடன் கூடிய மகிழ்ச்சியே, அதற்காக நீங்கள் இதுவரை செய்தது எல்லாமே பூச்சிய முயற்சிகள் தான்.
    ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு மருத்துவரின் மருந்தை விட அங்கு சென்று பார்க்கும் மக்களின் ஆறுதல் வார்த்தை ஒரு சுகத்தை கொடுக்கும் , இது போல நாங்கள் உங்களை வீதியில் இறங்கி சின்கள பேரினவாதத்திற்கு எதிராக போராட சொல்ல வில்லை, அவர்களுக்கு எதிராக , அவர்களை ஆதரிக்கும் அரசுக்கு எதிராக ஒரு கண்டன அறிக்கை ஒன்றே போதும் எங்கள் புண் பட்ட நெஞ்சை ஆற்றுவதற்கு...ஒரு வேளை அதற்கான ஆற்றல் உங்களிடம் இல்லாமல் இருந்தாலும் தான் சாந்த சமூகம் , அல்லது மதம் தன் கண் முன்னே நிந்திக்கபடும் போது ஒரு ஊனமுற்ற மனிதன் கூட பொங்கி எழுவான் என்பது இயற்கை அதிலும் நமது உண்மை மார்கத்துக்கு களங்கம் என்று வரும்போது அதன் வலிமை பன்மடங்கு அதிகமாகவே இருக்கும்.
    இங்கு எனக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன் தலைமையும் , அகில இலங்கை காங்கிரஸ் இன் தலைமையும் எதோ ஒரு வகையில் பிடித்து போக காரணம் அவர்கள் அரசுடன் ஒட்டிக்கொண்டிருதாலும், அவ்வப்போது எமக்கு ஆறுதல் அளிப்பது போல சில நடவடிக்கைகளை மேற்கொள்வது. அதானால்தான் அதிகம் விம்ரசிக்கப்படுவதும் உண்டு.
    இங்கு உங்கள் முன் இரண்டே இரண்டு வழி முறைகளே உண்டு....ஒன்று நீங்கள் உங்களின் தற்போதைய அரசியல் பாணியிலே சென்று கல்லும் மண்ணும் , கட்டடம்களும் கட்டி உங்கள் பெயரை அதில் பதித்து மகிழ்வது , இந்த மனப்பாங்கு நிச்சயம் எங்கள் மனதில் உங்களை ஒரு சமூக துரோகி என்பதற்கு அப்பால் பதிக்காது அல்லது மதிக்காது.
    அடுத்தது, நீங்களும் ஒரு வீரியமிக்க முஸ்லிம்களின் குரலாக மாறி எமக்கிருக்கும் பல பிரச்சினைகளை மற்ற எல்லா கட்சிகளுடனும் ஒரு ஒருமித்த கருத்தில் அரசுக்கும் , சர்வதேசத்துக்கும் எடுத்து வைக்க வேனும் என்பதே , இது நிச்சயம் எதிர்கால சந்ததி உங்களை ஒரு போராட்ட வீரன் என்றே அறிந்து கொள்ளும்.
    நான் எழுதும் இந்த பதிவு உங்களை ஒரு போதும் சென்றடையாது என்று தெரிந்தும் , கடலில் ஒரு கோப்பையுடன் , கரையில் இருந்து கொண்டு முத்தெடுக்க முயற்சிக்கும் ஒரு குருடனின் கதை போல மட்டும் இது ஆகாது என்பது மட்டும் என் நம்பிக்கை.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சகுனி ஆட்டமும் அதாவுல்லாவும்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top