மோடி முதலமைச்சரக இருந்த காலபகுதில்
குஜராத் இன கலவரத்தின் போது ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் படுகொலை
செய்யப்பட்டனர் ,அவர்களின் உடமைகள் அழிக்கப்பட்டன மேற்படி மனித உரிமை
மீறல்களை சுட்டிக்காட்டி கடந்த பல ஆண்டுகளாக
நரேந்திரமோடிக்கு விசா வழங்க மறுத்துவந்த அமெரிக்கா, தற்போது மோடி
பிரதமராகி உள்ள நிலையில், அவரை வரவேற்க காத்திருப்பதாக அறிவித்துள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில்
முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய வன்முறை ஏற்பட்டது. அதற்கு பின்னணியில்
நரேந்திரமோடி இருந்ததாகவும் கூறி, மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா தொடர்ந்து
மறுத்து வந்தது. இந்நிலையில், லோக்சபா தேர்தலில் பா.ஜ., பிரதமர்
வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டார். அதை தொடர்ந்து அமெரிக்கா,
தேர்தலுக்கு முன்னரே மோடியிடம் நெருங்க துவங்கியுள்ளது . இந்தியாவிற்கான,
அப்போதைய அமெரிக்க தூதரான நான்சி பவல், மோடியை சந்தித்து பேசியுள்ளார்
அதேவேளை அமெரிக்காவிற்கான இந்திய தூதர்
ஜெய்ஷங்கர், ஜோன் கெர்ரியை சந்தித்துள்ளார் இந்த சந்திப்பின்போது ,
மோடியின் அமெரிக்க வருகையை எதிர்பார்த்து காத்திருப்பதாக கெர்ரி
கூறியுள்ளார் ஜெய்ஷங்கர், கெர்ரி சந்திப்பு, இந்தியாவின் பிரதமராக
நரேந்திரமோடி பதவி ஏற்ற பின்னர், இந்திய, அமெரிக்க நாடுகளுக்கு இடையில்
நடந்த முதல் உயர்மட்ட சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து, அமெரிக்க அரசின்
துணை செயலர் வில்லியம் பேர்ன்சும் மோடியை அமெரிக்கா வரும்படி ஜெய்ஷங்கர்
மூலம் அழைத்து விடுத்துள்ளார். இந்த சந்திப்பின் போது, வில்லியம் பேர்ன்ஸ்,
ஜெய்ஷங்கர் ஆகியோர், இரு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகள் மற்றும்
ஆசிய வளைய நிலை, பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள்
குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர் .
இந்த சந்திப்பு குறித்து அமெரிக்க அரசின்
செய்தி தொடர்பாளர் ஜென் சாக்கி கூறுகையில், ‘இந்த சந்திப்பின்போது பிரதமர்
பொறுப்பேற்றுள்ள நரேந்திரமோடிக்கு ஜோன் கெர்ரி தனது வாழ்த்துக்களை
ஜெய்சங்கரிடம் தெரிவித்தார். மேலும், மோடியை அமெரிக்காவிற்கு வரும்படியும்
அழைப்பு விடுத்தார்,என தெரிவித்துள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டு, குஜராத் முஸ்லிம்
படுகொலைகளை சுட்டிக்காட்டி, மோடிக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்கா,
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின்னர், நரேந்திரமோடியை அமெரிக்காவிற்கு
வரும்படி அழைத்து, சிவப்பு கம்பளம் விரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment