• Latest News

    May 05, 2014

    மாலைதீவில் நடைபெறும் சார்க் இளைஞர் மாநாட்டில் இளைஞர் பாராளுமன்றத்தின் ஊடக மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் சுலைமான் ஷாபி கலந்து கொள்கின்றார்

    சார்க் இளைஞர் மகாநாடானது மாலைதீவின் ' அமீர் அகமட் மாகு ' நகரத்தில் இம்மாதம் 11ம் திகதி  இடம்பெறவுள்ளது. இம் மகாநாட்டில் சார்க் நாடுகளை உள்ளடக்கிய நாடுகளின் இளைஞர், யுவதிகள் தற்போது எதிர் நோக்கும் முக்கிய  சவால்கலான கல்வி, சுகாதாரம், தொழில் வாய்ப்புக்கள், ஆண் - பெண் சமத்துவம்,  சூழல் பாதுகாப்பு  தொடர்பாக கலந்துரையாடவுள்ளன.

    மாலைதீவில் நடைபெற உள்ள சார்க் இளைஞர் மகாநாட்டில் இலங்கயை  பிரதிநிதுத்துவப்படுத்தி அம்பாறை மாவட்டம் -  நிந்தவூர் பிரதேசத்தின், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும்,  ஊடக மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான சுலைமான் ஷாபி  பங்குபற்றுவதர்க்காக எதிர்வரும் 11ம் திகதி மாலைதீவு விஜயம் செய்யவுள்ளார்.
    இந்த நிகழ்வில் இலங்கைக்கான  சார்க் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் திருமதி. ஆர்.டி. ராஜபக்சா  இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் மேலதிக  செயலாளர் திருமதி. நிலாந்தி சுகததாச,   மற்றும்  இளைஞர்  பாராளுமன்ற செனட்  உறுப்பினர் துலாஞ்சலி ஆகியோர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
    இம் மகாநாடானது எதிர்வரும் 15ம் திகதி நிறைவுபெறவுள்ளது. 

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மாலைதீவில் நடைபெறும் சார்க் இளைஞர் மாநாட்டில் இளைஞர் பாராளுமன்றத்தின் ஊடக மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் சுலைமான் ஷாபி கலந்து கொள்கின்றார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top