• Latest News

    June 01, 2014

    சம்மாந்துறையில் நீதவான் நீதி மன்றத்தின் புதிய கட்டிடத் தொகுதி திறந்து வைப்பு

    எம்.வை.அமீர்;
    சம்மாந்துறை மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்த தனியானா நீதிமன்றம் என்ற கோரிக்கை அண்மையில் நீதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீம்  அவர்களது முயற்சியால் தற்காலிக கட்டிடம் ஒன்றில் திறந்து வைக்கப்பட்டு இயங்கி வந்தது. குறித்த நீதிமன்ற திறப்பு விழாவின் போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களால் சம்மாந்துறை மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டதர்க்கினங்க, 2014-05-30 சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் நிரந்தர கட்டிடத்தில்  நீதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீம் அவர்களது அழைப்பின் பெயரில் பிரதம நீதி அரசர் மொஹான் பீரிஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
    இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் மக்களது காலடிக்கு சேவையை கொண்டு செல்லும் அரசின் திட்டத்தின் கீழும் நிந்தவூர் மக்களின் தேவையை கருத்தில்கொண்டும் அங்கும் சுற்றுலா நீதிமன்றம் ஒன்றை அவசரமாக திறக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதேவேளை நிந்தவூர் ஒலுவில் மக்களின் தேவையை கருத்தில்கொண்டு நிந்தவூருக்கும் ஒலுவிலுக்கும் இடையில் நிரந்தர பொலிஸ் நிலையம் ஒன்றை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து கருத்து தெரிவித்த முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், அம்பாறை நீதி நிர்வாக பிரதேசத்துடன் இணைக்கப்பட்டுள்ள இறக்காமம் பிரதேசத்தை அப்பிரதேச மக்களில் அநேகர் தமிழ் பேசுபவர்களாக இருப்பதால் இறக்காமம் பிரதேசத்தை அக்கரைப்பற்று நீதி நிர்வாகத்துடனும் பொத்துவில் பிரதேசத்துடன் இணைந்துள்ள திருக்கோவில் பிரதேசத்தை அக்கரைப்பற்று நீதி நிர்வாகத்துடனும்  இணைப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

    அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதம நீதி அரசர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் இன்று கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்குள் 500 மில்லியல் ரூபாய் செலவில் நவீன நீதி மன்றத்துக்கான கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் நடும்  நிகழ்வும் இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சம்மாந்துறையில் நீதவான் நீதி மன்றத்தின் புதிய கட்டிடத் தொகுதி திறந்து வைப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top