• Latest News

    June 01, 2014

    கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் பெறுவதனுாடாக எதைச் சாதிக்க முற்படுகின்றார்கள்?

    Displaying (03) abdus salam Unp.jpg
    எஸ்.அஷ்ரப்கான்;
    கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசையும் அதன் தலைமைத்துவத்தையும் ஏமாற்றும் கபட நாடகத்தை ஜனாதிபதி செய்கின்றார் என்பதுடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைமைத்துவமும் முஸ்லிம்களை ஏமாற்றி எதிர்வருகின்ற தேர்தல்களில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுகின்ற ஒரு கபட நாடகம் அரங்கேறுகிறது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் அம்பாரை மாவட்ட வி பிரிவின் பிரச்சாரச் செயலாளர் எஸ்.அப்துஸ் ஸலாம் குற்றம் சாட்டினார்.

    இது விடயமாக அவர்  மேலும் குறிப்பிடும்போது,

    இது விடயத்தில் முஸ்லிம்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்.  எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களுடைய வாக்குகளைப் பெறுவதற்காக ஜனாதிபதியவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவதன் மூலம் மீண்டும் முஸ்லிம் காங்கிரசையும் அதன் தலைமைத்துவத்தையும் திருப்திப்படுத்தி
    அதன் ஆதவை ஜனாதிபதித் தேர்தலில் பெற்றெடுக்க முற்படுவதையும் முஸ்லிம் காங்கிரஸ் இந்த முதலமைச்சர் விடயத்தை வைத்து முஸ்லிம்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி அவர்களையும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மற்றும் உறுப்பினர்களையும் பலப்படுத்திக் கொள்ள கிழக்கு மாகா சபையில் முதலமைச்சர்  நாடகமொன்றை அரங்கேற்ற முற்படுகின்றமை தொடர்பாக  முஸ்லிம் வாக்காளர்கள் மிகவும் அவதானத்துடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும்.

    கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் பெறுவதனுாடாக எதைச் சாதிக்க முற்படுகின்றார்கள் என்பதை கேட்க விரும்புகின்றேன். ஏனென்றால் மத்திய அரசில் நீதியமைச்சர் பதவியை வைத்துக்கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளுக்கும் அடக்கு முறைகளுக்கும் எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாத முஸ்லிம் காங்கிரசால் கிழக்கு மாகாண சபை முதலமைச்சரைப் பெறுவதால் எதையும் சாதிக்க முடியாது. இதுதான் யதார்த்தமாகும்.

    கிழக்கு மாகாணத்தில் சுவீகரிக்கப்பட்ட முஸ்லிம்களுடைய காணிகளை பெற்றுக்கொடுக்க முடியுமா? அல்லது திருகோணமலை மாவட்டத்தில் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள பள்ளிவாசலைத் திறக்க முடியுமா? அல்லது மூதுார் ஜபல் மலையின் அடிவாரத்தில் எந்த சிங்களவர்களும் இல்லாத பிரதேசத்தில் வைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்ற முடியுமா ? என்பதையும் வினவ விரும்பகின்றேன்.

    ஆகவே, மத்திய அரசில் எதையும் சாதிக்காதவர்கள் மானில அரசில் எதைச்சாதிக்கப் போகின்றார்கள். வெறுமனே முதலமைச்சர் என்ற  பதவியைப் பெற்று  முஸ்லிம்களுடைய மனதை வேறு திசைக்குத்திருப்பி நாங்கள் முதலமைச்சர் பதவியைப் பெற்றுவிட்டோம் என்று வீராப்பு பேசி உணர்வுகளை கிழறிவிட்டு மீண்டும் வாக்குக் கொள்ளையில் ஈடுபட முஸ்லிம் காங்கிரஸ் முற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் பெறுவதனுாடாக எதைச் சாதிக்க முற்படுகின்றார்கள்? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top