-எம்.எம்.றிபாயுடீன், நூலகர் ,
-எம்.எம். மஸ்றூபா ஹமீம், சிரேஸ்ட உதவி நூலகர்- எம்.சி.எம்.அஸ்வர் சிரேஸ்ட உதவி - இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் - ஒலுவில்
அறிமுகம்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் மறைந்த அமைச்சரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவருமான மாண்புமிகு கலாநிதி எம்.எச்.எம்.அஸ்ரஃப் அவர்களின் அயராத முயற்சியினாலும்; கடின உழைப்பினாலும் ஒரு பல்கலைக்கழகக் கல்லூரியாக அப்போதிருந்த உயர்கல்வி அமைச்சர் கௌரவ ரிச்சட் பத்திரன அவர்களால் 1995ம் ஆண்டு ஒக்டோபர் 23ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
-எம்.எம். மஸ்றூபா ஹமீம், சிரேஸ்ட உதவி நூலகர்- எம்.சி.எம்.அஸ்வர் சிரேஸ்ட உதவி - இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் - ஒலுவில்
அறிமுகம்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் மறைந்த அமைச்சரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவருமான மாண்புமிகு கலாநிதி எம்.எச்.எம்.அஸ்ரஃப் அவர்களின் அயராத முயற்சியினாலும்; கடின உழைப்பினாலும் ஒரு பல்கலைக்கழகக் கல்லூரியாக அப்போதிருந்த உயர்கல்வி அமைச்சர் கௌரவ ரிச்சட் பத்திரன அவர்களால் 1995ம் ஆண்டு ஒக்டோபர் 23ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அக்காலத்தில் நிலவிய அமைதியற்ற சூழலால் இடம்பெயர்ந்திருந்த 39 மாணவர்கள் முதலில் இங்கே உயர்கல்வி பெற அனுமதி பெற்றனர.; அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்;சிக் கல்லூரியின் ஒரு பகுதிக் கட்டிடத்தில் தற்காலிகமாக இப்பல்கலைக்கழகக் கல்லூரி தனது கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்தது. சுமார் ஏழு மாதங்களின் பின்னர் 1996 ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி இப்பல்கலைக்கழகக் கல்லூரி இலங்கையின் 10வது தேசிய பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்வாகும்.
இது தென்கிழக்குப் பிராந்திய மக்களின் கல்வி மறுமலர்ச்சியின் ஒரு புதிய அத்தியாயம் என வருணிக்கப்படுகின்றது. இதற்காக அமைச்சர் மர்ஹும் கலாநிதி எம்.எச்.எம். அஷ;ரஃப்புடன் ஸ்தாபக உப வேந்தர் பேராசிரியர் எம்.எல்.ஏ..காதர் அவர்களின் உழைப்பும் முயற்சியும் உறுதுணையாக இருந்தன.
நூலகம்
கற்றல்இ கற்பித்தல், ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக எந்தவொரு உயர்கல்வி நிறுவனத்தினதும் 'இதயம்' எனக் கருதப்படும் நூலகம் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலும் உருவாக்கப்பட்டது. இது அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் ஒரு சிறிய அறையில் 2000 புத்தகங்களுடன் தனது தகவல் பணியை ஆரம்பித்தது. மொரட்டுவப் பல்கலைக்கழக நூலகர் அமரர் திரு. எஸ் ரூபசிங்கம் அவர்கள் பதிவாளர் ஏ. ஜஃபர் சாதிக் அவர்களின் முயற்சியினால் இந்நிறுவனத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு முதலாவது உதவி நூலகராக எம்.எம். றிபாயுத்தீன் அவர்கள் 15. 11. 1995 ல் நியமிக்கப்பட்டார்.
எம்.எம். .றிபாயுத்தீன் அவர்களுக்கும் அவருடன் இருந்த ஐந்து உதவியாளர்களுக்கும் அமரர் திரு. எஸ் ரூபசிங்கம் அவர்கள் பயிற்சிகளை வழங்கியமை இன்றும் நினைவு கூரத்தக்கது. பின்னர் எம். சி. எம். அஸ்வர் அவர்களும் உதவி நூலகராக 01.01.1997 ல் இணைத்துக் கொள்ளப்பட்டார் இதன் பின்னர் 1997ம் ஆண்டு பிரயோக விஞ்ஞான பீடம் சம்மாந்துறை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன் அப்போது இருந்த இணைந்த பல்கலைக்கழக நூலகம் விஞ்ஞான நூலகமாக மாற்றப்பட்டு இன்றும் இலங்கையில் உள்ள விஞ்ஞான நூலகங்களுள் சிறந்த நூலகமாக பணிபுரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. விஞ்ஞான நூலகத்திற்கு உதவி நூலகராக மர்ஹும் அல்ஹாஜ் ஏ. அமீர் அலி அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
ஓலுவில் வளாகத்திற்கு இடம் பெயர்வு
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கென ஒலுவில் பிரதேசத்தில் ஒதுக்கப்பட்ட நிரந்தர காணியில் இப் பல்கலைக்கழகம் 1998ம் ஆண்டு மே மாதம் இடமாற்றம் செய்யப்பட்டது. தற்காலிக கட்டிடங்களில் கலைப்பீடம், வர்த்தக முகாமைத்துவ பீடம், நூலகம் என்பன இயங்கி வந்தன. அப்போது உதவி நூலகர் எம்.எம். றிபாயுத்தீன் உதவி நூலகர் எம். சி. எம். அஸ்வர் ஆகியோருடய முயற்சியினால் இந்நூலகம்; 15,000 சேகரிப்புக்களைக் கொண்டிருந்தது.
தொடர்ந்து அதிகரித்து வந்த மாணவர் தொகையும், புத்தகங்களின் எண்ணிக்கையும் இத் தற்காலிக கட்டிடத்தில் இடம் கொள்ள போதாத காரணத்தினால் இந்நூலகம் குறித்த ஒலுவில் வளாகத்தில் காணப்பட்ட புனரமைக்கப்பட்ட நெற்களஞ்சிய சாலை தற்காலிக நூலகக் கட்டடமாக மாற்றப்பட்டு; மீண்டும் இடம்மாற்றப் பட்டது. இது இரண்டு மாடிகளைக்கொண்ட முற்றிலும் குளிரூட்டப்பட்ட நூல்நிலையமாக செவ்வனே சேவை செய்தது. இப் பல்கலைக்கழகத்தில் 2005 ம் ஆண்டு இஸ்லாமிய அரபு மொழி பீடமும் 2013 ம் ஆண்டு பொறியியல் பீடமும் ஆரம்பிக்கப்பட்டது. மாணவர்தொகையும் சேகரிப்புக்களின்; தொகையும் வருடா வருடம் அதிகரித்து வந்தன.
இருந்தாலும் இப்பல்கலைக்கழகத்திற்கு ஒரு நிரந்தர நூலகக கட்டிடம் அமைக்கப்பட வேண்டும் எனும் அவா நூலகர் எம் எம் றிபாயுதீன், உப வேந்தர் பேராசிரியர் எம்.எல்.ஏ காதர், தொடர்ந்து வந்த உப வேந்தர் கலாநிதி ஏ. ஜி. எம். ஹுசைன் இஸ்மாயில்; நூலக ஆலேசகர் திரு. எஸ் ரூபசிங்கம், தற்போதய உபவேந்தர் கலாநிதி எஸ்.எம். முஹம்மட் இஸ்மாயில் போன்றோரிடம் காணப்பட்டது. தெற்காசிவிலேயே ஒரு தலை சிறந்த நூலகமாக தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகம் அமைய வேண்டும் என்ற அவா தற்போது நிறைவேறியுள்ளது.
நிரந்தர நூலக கட்டிடம்
புதிய நூலகத்திறகான இடத்தை தெரிவு செய்வதில் இருந்து கட்டிட நிருமாணம் பூர்த்தியடைந்து இன்று அங்குரார்பணம் செய்யும் வகையில் மதிப்பிற்குறிய உபவேந்தர் கலாநிதி எஸ்.எம். முஹம்மட் இஸ்மாயில் அவர்கள்; ஆற்றிய பணிகள் அளப்பரியன. இதன் அமைவிடம் பல்கலைக்கழகத்தின் மத்திய பகுதியாகும.; இது ஒலுவில் வளாகத்தில் அமைந்துள்ள அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் இலகுவில் நூலகத்திற்கு வருகை தருவதற்கு வசதியான ஓர் இடமாகும். இந்நூலகம் 20.04.2014 ம் ஆண்டு; தனது சொந்த கட்டிடமான 50120 சதுர அடி பரப்பளவு கொண்ட ஓர் அழகிய கட்டிடத்திற்கு இடம்மாற்றப்பட்டு அதி மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
.இந்நிலையத்திற்கு 'அஷ்ரஃப் ஞாபகர்த்த நூலகம்' எனப் பெயரிடப்பட வேண்டுமென உபவேந்தர் கலாநிதி எஸ்.எம். இஸ்மாயில் அவர்களது சிபாரிசினை ஏற்றுக் கொண்ட பல்கலைக்கழக மூதவை இந்நூலகத்த்pற்கு அஷ்ரஃப் ஞாபகார்த்த நூலகம் எனப் பெயரிட்டுள்ளது.
இது பல விஷட சேவைகளையும் நவீன வசதிகளையும் கொண்டுள்ளதுடன் நூலகம் என்றாலே புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் அடுக்கி வைத்துக் கொண்டு அவற்றின் மூலம் தகவல்களை வழங்கும் ஓர் இடம் என்ற எண்ணக்கருவை மாற்றி நவீன காலத்திற்கும் இன்றைய வலைச்சமுதாயத்தினருக்கும் (Net Generation) ஏற்ப மேலைத்தேய நாடுகளில் உள்ள நவீன நூலகங்களில் உள்ளது போன்ற பல வசதிகளையும் பல சேவைகளையும் கொண்டுள்ளது.
இவற்றுள் முக்கியமாக Digital Knowledge Centre, Cyber Cafe , Discussion & Group Study
Centre
என்பவை குறிப்பிடத்தக்கவை. இந்நூலகத்துடன் கலாச்சார அரும்பொருட்காட்சிச்
சாலை (Cultural Museum) ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இக்காட்சிச்சாலையில்
எமது முன்னோர்கள் பாவித்த அரிய பல பொருட்கள் எமது கலாச்சாரம்
பாரம்பரியத்தை இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு எடுத்தியம்பும் விதத்தில்
மிக அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நூலகம் சர்வதேச தரம் வாய்ந்ததாக இன்று துலங்குவதற்கு காரணமாக அமைந்த உபவேந்தர் கலாநிதி எஸ்.எம் முஹம்மட் இஸ்மாயில் அவர்களுக்கும், சகல விதங்களிலும் ஒத்துழைப்பு வழங்கிய அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும், கௌரவ உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. தி;ஸாநாயக்கா அவர்களுக்கும், அமைச்சின் செயலாளர் சுனில் ஜயந்த நவரட்ண அவர்களுக்கும், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினருக்கும் தென்கிழக்கு சமூகம் என்றும் நன்றியுடையோம்.
சேகரிப்புகள்
இங்கே 120,000 புத்தகங்களும் 275 கல்விசார் பருவ வெளியீடுகளும், மேலும் பல விஷேட, அரிதான சேகரிப்புகளும் காணப்படுவதுடன் ஒரே நேரத்தில் 400 மாணவர்கள் உஷாத்துணை செய்வதற்கும் வாசிப்பதற்கும் தேவையான 400 இருக்கைகளை கொண்டுள்ளது.
சேகரிப்புகள்
இங்கே 120,000 புத்தகங்களும் 275 கல்விசார் பருவ வெளியீடுகளும், மேலும் பல விஷேட, அரிதான சேகரிப்புகளும் காணப்படுவதுடன் ஒரே நேரத்தில் 400 மாணவர்கள் உஷாத்துணை செய்வதற்கும் வாசிப்பதற்கும் தேவையான 400 இருக்கைகளை கொண்டுள்ளது.
அஷ;ரஃப் ஞாபகர்த்த நூலகம் சில விசேட சேகரிப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்விசேட சேகரிப்புக்கு உவைஸ் சிறீலங்கா இஸ்லாமிய கற்கைகள் சேகரிப்பு [Uwaise Srilanka Islamic Studies Collection] எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவ்விசேட சேகரிப்பில் அரிதான பெறுமதி மிக்க, இப்போது எங்குமே விலைக்கு வாங்கமுடியாத புத்தகங்கள், பருவ வெளியீடுகள் , கையெழுத்துப்பிரதிகள், சஞ்சிகைகள், ஆய்வுக்கட்டுரைகள் என்பன காணப்படுகின்றன. இவற்றுள் பேரறிஞர்;, பேராசிரியர் மர்ஹும் அல்லாமா உவைஸ் அவர்களுடைய சேகரிப்புகள் முக்கிய இடம் பெறுகின்றன.
அத்துடன் புலவர்மணி மர்ஹும் ஏ.எம்.சரிபுத்தீன் அவர்களுடைய ஆக்கங்களும் சேகரிப்புகளும், அமைச்சர் மர்ஹும் எம்.எஸ்.காரியப்பர் பேராசிரியர் செல்வரெத்தினம்;, காலம் சென்ற நீதிபதி மர்ஹும் ஹுசைன், முன்னாள் அதிபர் எம் .எம் .மொஹிதீன் டாக்டர் ஏ. அபூபக்கர,; கல்விப்பணிப்பாளர் யு.எல் அலியார், பேராசிரியர் சுல்தான் பாவா, புலமையாளர் எம்.எம். மஹ்ரூப், பேராசிரியர் எஸ். தில்லைநாதன், நூலகர் எஸ்.எம். கமால்தீன், முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சின் முன்னாள் செயலாளரும் கல்விமானுமாகிய ளு.ர்.ஆ. ஜெமீல் ஆகியோருடைய சேகரிப்புகள் விசேடமானவை . இந்தவரிசையில் அடுத்ததாக காப்பியக்கோ டாக்டர் ஜின்னா சரிபுத்தீன் அவர்களது ஆக்கங்களும் சேரவிருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான ஓர் விடயமாகும்.
இலத்திரனியல் வளங்கள்
டிஜிடல் அறிவு நிலையமானது
(Digital
Knowledge Centre) இலத்திரனியல் வளங்களை பாவிப்பதற்கேற்ப தொலைக்காட்சி, வானொலி, மற்றும் உபகரணங்களுடன் பல கணனிகளையும், இணையத் தொடர்பினையும் கொண்டிருக்கின்றது. இங்கே 1200 னுஏனு க்களும், பல புலமைசார் தரவுத் தளங்களும், இலத்திரனியல் புத்தகங்களும் மாணவர்களின் பாவனைக்காக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இந்நூலகம் இலத்திரனியல் கல்விசார் பருவ இதழ்களையும், தரவுத்தளங்களையும் பல மில்லியன் ரூபா செலவில் சந்தா செய்திருப்பதன் மூலம் ஆய்வாளர்களின் இலக்கியத் தேடலுக்கு உதவி செய்கின்றது. அண்மையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் 125 மில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக நூலக கூட்டமைப்பிலும்
(Library consortia) இலங்கை தென்கிழக்குப்பல்கலைக்கழக அஸ்ரப் ஞாபகர்த்த நூலகம் அங்கம் வகிப்பதனால் பலகலைக்கழக ஆணைக்குழுவினால் சந்தா செய்யப்பட்ட அனைத்து இலத்திரனியல் வளங்களையும் பாவிக்கின்ற உரிமை இந்நூலக வாசகர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இலத்திரனியல் வளங்களை கீழ்வரும் முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.
டிஜிட்டல் நூலகம் (Digital Library )
இங்கே டிஜிட்டல் நூலகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் அரிதான பல நூல்களையும் ஆவணங்களையும் கணணிமயப்படுத்துவதுடன் பல்கலைக்கழகத்தின் அனைத்து வெளியீடுகள், அறிக்கைகள்;, ஆய்வுக்கட்டுரைகள், போன்றவற்றைப் பாதுகாத்து ஒன்லைன் பாவனைக்கு வழி வகுப்பதாகும். இலங்கை தேசிய விஞ்ஞான மன்றத்தில் National Digitization Project இல் இந்நூலகமும் தெரிவாகி இருக்கின்றது. இச்செயற்றிட்டத்தின்; மூலம் மொத்தமாக 150,000 பக்கங்கள் தேசிய விஞ்ஞான மன்றத்தினால் னபைவைணைந செய்து தரப்படுவதுடன் தேவையான பயிற்சி, தொழிநுட்ப உதவி போன்றனவும் இந்நூலகத்திற்கு கிடைக்கும.; டிஜிடல் நூலகத்தினை கீழ்வரும் முகவரியில் யஉஉநளள பண்ணலாம.
நூலகத்தின் குறிக்கோள்களும் சேவைகளும்
அஷ;ரஃப் ஞாபகர்த்த நூலகமானது இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கற்றல் கற்பித்தல் ஆய்வு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குத் தேவையான தகவல் வளங்களையும் சேவைகளையும் வழங்குவதுடன் இப்பல்கலைக்கழகத்தினை சர்வ தேச தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக (World Class University) தரமுயர்த்தும் உபவேந்தரின் தூர நோக்கிற்;கு துணை போவதற்காக மிகவும் நவீனமயமான தகவல் சேவைகளையும் வசதிகளையும் கொண்டுள்ளது. உலகின் பல பாகங்களிலிருந்தும் புலமையாளர்கள் இங்கே வருகை தருவதற்கும் ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் தேவையான மரபுரீதியான அச்சிடப்பட்ட தகவல் வளங்களுக்கும் மேலதிகமாக இலத்திரனியல் வளங்களையும்,; பல புலமைசார் தரவுத்தளங்களையும் ஆய்வாளர்களுக்குத் தேவையான புலமைசார் தகவல்களையும் சேவைகளையும்,; இந்நூலகம் வழங்குகின்றது. அதே போல் வெளிநாட்டு மாணவர்களையும் ஆய்வாளர்களையும் கவரும் வகையில் இதன் கட்டிடம் அழகான அமைதியான சூழலில், திருப்தியான சிற்பசாஸ்திரத்துடன்
(Architecture) வடிவமைக்கப்பட்டிருப்பதுடன் பல சௌகரியங்களையும்; வசதிகளையும் கொண்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் ஐந்து பீடங்களிலும் உள்ள கற்கை நெறிகளுக்கும், ஆய்வுகளுக்கும் தேவையான தகவல் வளங்களையும் பல்வேறு வடிவங்களிலும் , பல்வேறு ஊடகங்களிலும் வழங்குகின்ற வலிமை இந்நூலகத்திற்கு உண்டு. இங்கே ஒரு இலட்சத்து பதினைந்தாயிரம் அச்சிடப்பட்ட புத்தகங்களும் நூற்றுக்கு மேற்பட்ட தலைப்புகளில் கல்விசார் பருவ இதழ்களும் பல புலமைசார் தரவுததளங்களும் இலத்திரனியல் பருவ வெளியீடுகள் போன்றவையும்; பாவனையாளர்களின் கற்றல் கற்பித்தல் ஆய்வுத்தேவைகளுக்குத் துணை புரிகின்றன.
மாற்றுத் திறன் மாணவர்களுக்காக போதியளவு வசதிகள் செய்யப்பட்டிருப்பது மற்றுமோர் சிறப்பம்சமாகும். இது மாத்திரமன்றி இந்நூலகம் தனது அனைத்து சேவைகளையும் தன்னியக்கப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். தன்னியக்கப் படுத்துவதற்காக முழுர்யு எனும் திறந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Radio Frequency
Identification (RFID) Technology
இங்கே பாவிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இங்கே காணப்படுகின்ற அனைத்து நூல்களினதும் நூல்விபரப்பட்டியல் ஜஊயவயடழபரநஸ கணணிமயப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒன்லைன் மூலம் தேடுதல் செய்யவும் முடியும். இதற்காக Online Public
Access Catalogue (OPAC)
ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமல்லாது நமக்குத் தேவையான
தலைப்பில் அல்லது குறித்த எழுத்தாளரின் பெயரில் எத்தனை புத்தகங்கள்,
என்னென்ன புத்தகங்கள் நூலகத்தில் உள்ளன என்பதையும், அவை நூலகத்தின்
எந்தப்பகுதியில் காணப்படுகின்றன, அவை இரவல் பெறக்கூடியவையா, இல்லையா
என்பனபோன்ற முழுத் தகவல்களையும் ழுPயுஊ மூலம் பெறமுடிவதோடு தமக்குத்
தேவையான புத்தகத்தை வெளியிலிருந்தே முற்பதிவு (சநளநசஎந) பண்ணக்கூடிய
வசதிகளும் உண்டு. ழுPயுஊ மூலம் புத்தகங்கள் தேடவிரும்புபவர்கள் கீழ்வரும்
முகவரியை நாடவும். http://opac.lib.seu.ac.lk/
இந்நூலகம் தென்கிழக்குப் பல்கலைக்கழக சமுகத்தினருக்கு சேவை செய்வதுடன் மேலதிக சேவைகளை தென்கிழக்குப் பிராந்திய பொதுமக்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றது.
விரிவாக்கல் சேவைகள் எங்களுடைய சமுதாயத்தினை ஓர் அறிவுடைச் சமுதாயமாக உருவாக்கும் நோக்குடன் இந்நூலகம் தனது சேவைகளை பல்கலைக்கழக சமூகம் தவிர்ந்த அதனை அண்டிய சமுகத்திற்கும் குறிப்பாக தென்கிழக்குப் பிராந்திய மக்களுக்கும் பல சமூக சேவைகளையும் ஆற்றி வருகின்றமை குறிப்பிடதக்க ஓர் விடயமாகும்.
அஸ்ரப் ஞாபகார்த்த நூலகமானது தென்கிழக்குப் பிராந்தியத்திலுள்ள ஏனைய ஆய்வாளர்கள், கல்வியியலாளர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மேலும் பல துறைகளும் சார்ந்த தகவல் தேவையுடையோர்களுக்கும் தகவல் சேவைகளை வழங்குகின்றமை அதன் விசேட அம்சமாகும். தற்காலிக அங்கத்தவராக்கம் இங்கே இருப்பதனால் பொதுமக்களும் பலன் பெறலாம்.
அதுமட்டுமல்லாது இப்பிரதேசத்திலுள்ள பொது நூலகர்களுக்கும்;, பாடசாலை நூலகர்களுக்கும் பல பயிற்சிகளையும் அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும.; இந்நூலகத்தின் strategic plan இல் தென்கிழக்குப்;பிரதேசதிலுள்ள அனைத்து பொது நூலகங்கள், பாடசாலை
நூலகங்கள் போன்றவற்றை ஒன்றிணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து
பயிற்சிகள் கற்கை நெறிகள், கருத்தரங்குகள், வளப்பரிமாற்றங்கள,; ஆலோசனைகள்
ஆகியவற்றை வழங்கும் நோக்குடன் தகவல் வலைப்பின்னல்
(Information Network) ஒன்றை உருவாக்குவது முக்கிய ஒரு விடயமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அஷ;ரஃப் ஞாபகர்த்த நூலகம் அதன் எதிர்காலத்திட்டங்களில் வெற்றியடைந்து மேலும் வளர்ந்து பல்கலைக்கழக சமூகத்திற்கும் தென்கிழக்குப் பிராந்தியத்திற்கும் எமது தாய் நாட்டிற்கும் மேலும் பல சேவைகளை வழங்கவேண்டும் என அதன் நூலகரும்இ சிரேஷ;ட உதவி நூலகர்களும் ஆசித்து நிற்கின்றனர்.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் - ஒலுவில்
(படங்கள்:- -பி.எம்.எம்.எ.காதர்)
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் - ஒலுவில்
(படங்கள்:- -பி.எம்.எம்.எ.காதர்)
0 comments:
Post a Comment