• Latest News

    June 03, 2014

    கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்துக்கு இரகசியமாக பெரும்பான்மை இன பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

    எம்.வை.அமீர்;
    உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்துக்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பிரதேச செயலாளராக மொகான் விக்ரம ஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

    கல்முனையைப் பொறுத்தவரையில் நூறு வீதம் தமிழ் பேசுபவர்களைக் கொண்ட பிரதேசமாகையால் காலம் காலமாக தமிழ் பேசும் உயர் அதிகாரிகளே நியமிக்கப்பட்டு வந்துள்ளனர் கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு மட்டுமே சில நேரங்களில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வந்துள்ளனர். தற்போது பொலிஸ் நிலையத்துக்கும் தமிழ் பேசும் ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளார். நூறு வீதம் தமிழ் பேசுபவர்களைக் கொண்ட கல்முனை பிரதேசத்தில் மக்கள் அவர்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இலகுவாக இருந்தது.
    தற்போது கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்துக்கு சிங்கள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது குறித்து பாராளமன்ற பிரதிநிதித்துவம் மற்றும் மாநகரசபை பேன்ற அதிகாரங்களை தன்னகத்தே கொண்டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களை வினவியபோது நூறு வீதம் தமிழ் பேசுபவர்களைக் கொண்ட இப்பிரதேச செயலகத்துக்கு சிங்கள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் அம்பாறை மாவட்ட செயளாளருக்கே தெரியாமலே குறித்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் இது விடயமாக தமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரை சந்தித்து விளக்கம் கோரவுள்ளத்தாகவும் உடனடியாக தமிழ் பேசும் பிரதேச செயலாளர் ஒருவரை கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்துக்கு நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

    அண்மையில் தமிழ் கூட்டமைப்பின் தூதுக்குளுவுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தலைமையிலான குளுவுக்கும் இடையே கல்முனையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றதற்கு இதற்கும் தொடர்பு உள்ளதா என வினவியபோது குறித்த நியமனமானது கூட்டமைப்பினுடனான கலந்துரையாடலுக்கு முன்பே வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்நியமனம் தொடர்பான பின்புலத்தை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்துக்கு இரகசியமாக பெரும்பான்மை இன பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்: அமைச்சர் ரவூப் ஹக்கீம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top