• Latest News

    June 23, 2014

    பொது பல சேனாவினர் தெளிவாக பயங்கரவாத தடுப்பு சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளனர்

    M.ரிஸ்னி முஹம்மட்: 
     பொது பல சேனா அமைப்பு தெளிவாக பயங்கரவாத தடுப்பு சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் சட்ட பிரிவுகளை  மீறி செயல்பட்டுள்ளது . அதனால் (பயங்கரவாத தடுப்பு சட்டம் இணைப்பு)
    அந்த அமைப்பினர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை மீறிய குற்றத்துக்காக கைது செய்யப்படவேண்டும் என  இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (The Bar Association of Sri Lanka) தலைவர் உபுல் ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

    மேலும் அவர் தெரிவித்துள்ள தகவலில் ,”பல கைதுகளை போலீஸ் செய்யதுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த கைதுகள் 41 அல்லது 44 ஆக இருக்கலாம். ஆனால் அது முக்கியம் அல்ல. அவர்கள் கடலில் அமிழ்ந்து கிடக்கும் பனிப்பாறையின் மேல் முனை மட்டுமே .ஒரு பொது பேரணியில் இனவாத உரையின்  மூலம்  இவர்களை  தூண்டியது  யார் அவர்களை   கைது செய்வது  அதிகாரிகளின் கடமை ஆகும்.


    அவர்களின் வெறுப்பு பொது தளத்தில்   , Youtube இல் இருக்கிறது . அவர்கள் பகிரங்கமாக செய்த வெறுப்பு பேச்சுக்கள் பயங்கரமா இருக்கின்றன.

    பல பொறுப்புள்ள நபர்கள்  அவர்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை  மீறிவெறுப்பு பேச்சுக்களை பேசும் கூட்டம் நடத்த அளுத்கமயில் அனுமதிக்க கூடாது என பொலிசாருடன் வாதிட்டுள்ளனர் என்று அறியப்படுகிறது.  எனிமும் மாறாக அவர்களுக்கு  போலீஸ்பாதுகாப்புவழங்கப்பட்டது.நாம் கெளரவ அட்ரணி ஜெனரல் கவனத்திற்கு இந்த நிலைமையை  கொண்டுவந்தோம் . இரண்டு முறையீடுகள் செய்தோம் ,   மே 20 ஆம் திகதி ஒன்றும் ,  ஜூன் 4 ஆம் திகதி மற்றொன்றும் ஆனால் இந்த முறையீடுகள்பயன் தரவில்லைஇந்த நபர்களின்  அரசியல் செல்வாக்கு எதுவாக இருந்தாலும்  பயங்கரவாத தடுப்பு சட்ட விதிகள் மூலம் இவர்கள் கையாளப் படவேண்டும் என  உபுல் ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார் .
    PTA-Hate-speech-
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொது பல சேனாவினர் தெளிவாக பயங்கரவாத தடுப்பு சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளனர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top