மருதமுனை ஒன்லைன் இணையத்தள சேவை நிலையத்தின் உத்தியோகபூர்வ அலுவலகம் இன்று (22-06-2014) மாலை 5.15 மணிக்கு மருதமுனை மஸ்ஜிதுல் அக்பர் வீதியில் பள்ளிவாசல் முன்பாக திறந்த வைக்கப்பட்டது. ஒன்லைன் இணையத்தள சேவை நிலையத்தின் பிரதி முகாமையாளர் ஏ.எச்.அஸாம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர், ஆரா கன்ரக்சன் முகாமைத்துவப்பணிப்பாளர் என்.எம்.எம்.இஸ்மாயில் ஆகியோர் விஷேட விருந்தினர்களாகக் கலந்து கொண்டு அலுவலகத்தைத் திறந்து வைத்தனர். ஒன்லைன் இணையத்தள சேவை நிலையத்தின் உத்தியோகத்தர்களும் ஊடகவியலாளர்களும் இந்த நிகழ்வில் கலந்த கொண்டனர்.
June 23, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment