• Latest News

    June 19, 2014

    அடிப்படைவாத சண்டைகளை ஏற்படுத்துபவர்கள் விமல், சம்பிக்க, ஹக்கீம், பதியுத்தீன், கோத்தபாய என்போரே….!

    அரசாங்கத்திலுள்ள ஐந்து அமைச்சர்கள் மற்றும் ஒரு அமைச்சுச் செயலாளரும் அடிப்படைவாத பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்காக திரைமறைவில் நிற்பதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிடுகின்றது.
    கொழும்பில் ஊடகவியலாளர் ஒன்றுகூடலொன்றின்போது கலந்துகொண்ட அவ்வொன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் நஜித் இந்திக்க குறிப்பிடும்போது, விமல் வீரவங்ச, பாட்டாலி சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுத்தீன், பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரின் அமைப்புக்களின் மூலம் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பாடு செய்யப்படுவதாகவும், ஆட்சியாளர்களின் ஆட்சியைத் தக்க வைப்பதற்காக இவர்கள் செயற்படுகின்றார்கள் எவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மாணவர்கள் பாதயாத்திரை செல்லும்போது, ஆர்ப்பாட்டம் நடாத்தும்போது அதற்கு எதிராக நீதிமன்றத்திலிருந்து உத்தரவு பிறப்பித்துக் கொள்கின்ற ஆட்சியாளர்கள் மக்களிடையே கைகலப்பு நிகழ்கின்றது என்பதைத் தெரிந்த பின்பும் அடிப்படைவாத நச்சுக்கருத்துக்களைப் பரப்புகின்ற பகுதியினருக்கு இடமளித்திருப்பதாகவும் நஜித் இந்திக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

    (கேஎப்) 



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அடிப்படைவாத சண்டைகளை ஏற்படுத்துபவர்கள் விமல், சம்பிக்க, ஹக்கீம், பதியுத்தீன், கோத்தபாய என்போரே….! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top