அஸ்ரப் ஏ சமத்;
பீபீஎஸ்
நடவடிக்கைகளுக்கு எதிராக தற்பொழுது ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார். அவருக்கு
எதிராக 2 வழக்குகளை நீங்களே (முஸ்லிம்கள் )பதிவு செய்யதுள்ளீர்கள்.
தற்பொழுது பிரச்சினை இருக்கும் சர்ந்தர்ப்பத்தில் அவரை பிடித்து
சிரையில் அடைந்தால் சாதாரண ஒரு தேரர் பௌத்த மக்கள் மத்தியில் மிகவும்
பிரபல்யமாகிவிடுவார். தற்போதைய பிரச்சினைகள் முடிந்தபிறகு அவருக்க உரிய
முறையில் சம்பந்தப்பட்டவர்கள் சட்டநடவடிக்கைகளை சிறுக சிறுக எடுப்பார்கள்.
எனக் கூறினார் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கொழும்பு வடக்கு – சஞ்ய இரசிங்க. மாளிகாவத்தையில் உள்ள தேசிய
வை.எம்..எம்.யில் மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தினால் ஹர்த்தால் தொடர்பில்
இன்று(18) பி.பகல் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்
கூட்டத்திற்கு மாளிகவாத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி,கொழும்ப வடக்கு
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், மாளிகாவத்தையில் உள்ள சகல பௌத்த பண்சலையைச் சேர்ந்த தேரர்கள், ஹிந்து மற்றும் மௌலவி மற்றும் சிவில் சமுகத்தினரும் கலந்து கொண்டனர்.
ஒரு கடையில் திறந்து அதில் உழகக்கும்
பணத்தை தர்கா டவுனில் பாதிக்கபட்ட மக்களுக்கு வழங்குங்கள். அதுதான் அந்த
மக்களுக்கு நீங்கள் செய்யும் கைமாறு. அதனை விட்டு பொலிசாருக்கு கல்வீசி
அல்லது முஸ்லீம் கடைகளுக்கு சிங்களவர் கல்வீசினால் அமைதியாக இருக்கின்ற
மாளிகாவத்தையில் வீனான பிரச்சினைகள் இடம்பெறும்.
உங்களை தூண்டிவிட்டு அதில் அரசியல் லாபதேட
பலர் இங்கு உள்ளனர். ஆகவேதான் இங்கு உள்ள தாய்மார்கள் பெற்றோர்கள் தமது
பிள்ளைகளை பிரச்சினைகளில் ஈடுபடாமல் பாதுகாருங்கள.
மாளிகாவத்தை சிறிது முன்னேறி வருகின்றது.
அடுத்த 4 வருடங்களுக்குள் மாளிகாவத்தை கொழும்பு 7 போன்று ஆக்குவதற்கே
மாளிகாவத்தை பொலிசாரும் அரசாங்கமும் முயற்சிக்கின்றது. இங்கு வாழும்
முவினங்களுடன் ஜக்கியத்தை கட்டியெழுப்பவே நாங்கள் பாடுபடுகின்றோம்..
மாளிகாவத்தையில் யாராவது கட்டுக்கதைகளை அல்லது துண்டுப்பிரசுரங்களை
வெளியிட்டுள்ளனர். அதனை நம்பவேண்டாம். அது உரிமை கோரதவர்கள் டிசைன் பண்னி விட்ட ஒரு
விளம்பரம். ஆதனை நம்ப வேண்டாம். வேறு சிலர் அரசியல் நோக்கங்களுக்காக உங்களை
தூண்டினால் எங்களுக்கு சொல்லுங்கள். வீன் பிரச்சினைகளுக்கு போகவேண்டாம்.
நான் இந்த பொலிஸ் யூனிபோமை அணிந்தால் சிங்களவர் முஸ்லீம் தமிழர் எனப்
பார்ப்பதில்லை. எனது இரத்தம்தான் முஸ்லிம் இரத்தம் எனக்குள்ள அங்கங்கள்
போன்ற முஸ்லிமுக்கு அங்கங்கள் உண்டு. நான் வேறு நீ வேறு அல்ல.,னால் நாம்
இரண்டாவது தாய் எமது நாடு ஸ்ரீலங்கா, கடந்த 83 ல் நடந்தேரிய சம்பவம்
தமிழர்களுக்கு அடித்தர்கள் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வேறு
நாட்டுகளுக்குச் சென்று டயஸ்போர என்ற அமைப்பில் இன்னும் இந்த
நாட்டுக்எதிராக செயல்படுபகின்றார்கள் 83 ல் நடைபெற்ற வடு இன்னும்
தீரவில்லை. எனக் கூறினார்.
தேசிய வை.எம்.எம்.ஏ முன்னாள் தலைவர் எஸ்.பி.சி ஹலால்டின்:
இங்கு உரையாற்றுகையில் இந்த நாட்டில்
சுதந்திரம் பெற்றுக்கொடுத்த கலாநிதி ரீ.பி ஜயா தொண்டு இன்று வரை நாங்கள்
சகல சமுகங்களுடன் அண்னியோன்னிய வாழ்ந்து வருகின்றோம்.
ஆனால் கடந்த 2 வருட காலமாக இந்த பொது
பலசேனா முஸ்லிம்களுக்கு எதிராக உரையாற்றுவதை இங்கு உள்ள தேரர்கள் பொலிஸார்
செவிமடுத்துள்ளீர்களா ?
அவர் சொல்லுகின்றார். நாங்கள் சாப்பாட்டையோ
தேயிலையோ சிங்களவருக்கு கொடுக்கும்போது 3 முறை துப்பிவிட்டுக்
கொடுப்பதாகவும் சொல்கின்றார். அளுத்கம சம்பவத்திற்கு முழுக்க காரணம் இந்த
ஞானதேரர். அவரை ஏன் இந்த அரசாங்கமோ ஏனைய பொளத்தர்களோ பொலிசாரோ அவர்
முஸ்லீம்களுக்கு எதிராக எடுக்கின்ற நடவடிக்கை நிறுத்தவில்லை என கேட்க
விரும்புகின்றேன்.
கெத்தராம பண்சலையின் தேரர்.-
முஸ்லிம்கள் நல்லவர்கள்,ஆனால் எம்மில் உள்ள
சில மோடையர்கள் அம்மக்களுக்கு அவதூறு எழுப்பி இனக்குரோதத்தை
வழக்கின்றார்கள். காலம் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் இசாக்
அவர்களுடன் கெத்தராம பண்சலையில் ஏற்பட்ட நட்பு இன்றும் ;முஸ்லீம்களது சகல
நிகழ்வுகளிளும் கலந்து கொண்டிருக்கின்றேன். மாளிகவாத்தையில் 40
வருடங்களுக்கு எனது பண்சலையில் இப்பிரதேசத்தில் படிக்காத சிறிய
பிள்ளைகளுக்கு பாடசாலை ஆரம்பித்து இன்று கூடுதலான முஸ்லீம் ;மாணவர்கள்
கற்றுவருகின்றனர்.ஆகவே நாம் ஜக்கியமாக வாழ்வோம். வீன் வண்செயல்களுக்கு
செல்ல வேண்டாம்.என்றார் .
0 comments:
Post a Comment