• Latest News

    June 27, 2014

    கல்முனை மாநகரசபையின் பிரதிமுதல்வர் நியமன விடையத்தில் மருதமுனை மக்கள் அதிருப்தி!

    எம்.வை.அமீர்;
    ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கல்முனை மாநகரசபையின் முதல்வராக செயற்பட்ட கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அண்மையில் தான் வகித்த முதல்வர் பதவி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர் போன்ற பதவியில் இருந்து விலகி அமைச்சர் அதாவுல்லாஹ்வின் தேசியகாங்கிரசில் இணைந்து கொண்டதன் காரணமாக சிராஸ் மீராசாஹிப் கல்முனை மாநகரசபையில் வகித்த உறுப்பினர் பதவி வெற்றிடமாக இருந்தது.

    காலப்போக்கில் முதல்வராக சிரேஷ்ட சட்டத்தரணியும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிச் செயலாளருமான நிஸாம் காரியப்பர் அவர்கள் நியமிக்கப்பட்டார். நிஸாம் காரியப்பர் முதல்வராக நியமிக்கப்பட்டதன் பின்னர் மாநகரசபையின் பிரதி முதல்வருக்கான வெற்றிடமும் காணப்பட்டது.

    கலாநிதி சிராஸ் மீராசாஹிப்  விலகிச்சென்றதன் காரணமாக ஏற்பட்டுள்ள குறித்த உறுப்பினர் வெற்றிடத்துக்கு இதுவரையும் எவரையும் நியமிக்காத நிலையில், தெரிவு வாக்குகள் அடிப்படையில் அடுத்த நிலையில் இருக்கும் நற்பெட்டிமுனையை சேர்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டியுள்ளது. இவ்வாறன சூழ்நிலையில் குறித்த வெற்றிடத்தை  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் சிரேஷ்ட பிரதித்தலைவர் ஏ.எல்.அப்துல் மஜீத்க்கு வழங்கி அவரை பிரதி முதல்வராக நியமிக்க வேண்டும் என  கட்சி முக்கியஸ்த்தர்கள் வேண்டிக்கொள்வதன் காரணமாக சிரேஷ்ட பிரதித்தலைவர் ஏ.எல். அப்துல் மஜீதை உறுப்பினராகவும் பிரதி முதல்வராகவும் நியமிப்பதற்கான செயற்பாடுகளில் கட்சி ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.

    தற்போது ஊடகங்கள் ஊடாக கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வர் பதவிக்கு எம்.ஐ.எம்.பிர்தௌஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நியமனமானது  சிரேஷ்ட பிரதித்தலைவர் ஏ.எல்.அப்துல் மஜீத் மாநகரசபையின் உறுப்பினரானதும் அவருக்கு பிரதிமுதல்வர் வழங்குவது என்ற ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

    கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வர் பதவிக்கு எம்.ஐ.எம்.பிர்தௌஸ் நியமிக்கப்பட்டதன் பின்னர் தற்போது முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்கள் சிலர் மத்தியில் அதிர்ப்பியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. சிரேஷ்ட பிரதித்தலைவர் ஏ.எல்.அப்துல் மஜீத்க்கு பிரதிமுதல்வர் வழங்குவதில் தாங்களுக்கு கருத்து முரண்பாடு இல்லை என்றபோதிலும் தற்போது வழங்கப்பட்டுள்ள இடைக்கால நியமனத்தை வாக்குகள் அடிப்படையில் முன்னிலையில் இருக்கும் மருதமுனையை சேர்ந்த அமீர்க்கு வழங்கி இருக்க வேண்டும் என்ற கருத்தும் சாய்ந்தமருதுக்குத்தான் வழங்கவேண்டும் என்றால் அதனை முன்னாள் பிரதி முதல்வர் பசீருக்கு வழங்கியிருக்கலாம் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

    இதே நிலையில் கல்முனை மாநகர சபையின் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீட உறுப்பினரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றஹீப் கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்யவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. மருதமுனை மக்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு தங்களது பிரதிநித்துவத்தை பெறும் நோக்கில் அதி உச்ச அளவில் வாக்குகளை வழங்கி இருந்தபோதிலும்  பிரதி முதல்வர் விடையத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சரியான முடிவை எடுக்கவில்லை என தங்களது அதிர்ப்தியை வெளியிடுகின்றனர்.
     
    ஆக, மொத்தத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான நிலை போன்று கல்முனை மாநகரசபையிலும் நடைபெருவதர்க்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருப்பதாக மகாஜனங்கள் எதிர்வு கூறுகின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை மாநகரசபையின் பிரதிமுதல்வர் நியமன விடையத்தில் மருதமுனை மக்கள் அதிருப்தி! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top