• Latest News

    June 18, 2014

    தராதரம் பாராமல் உயர்ந்த பட்ச தண்டனையை வழங்க வேண்டும்: சஜித் பிரேமதாஸ

    அளுத்கம வன்முறை சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு பிரிவினர் பக்கச்சார்பாக செயற்படக் கூடாது. மேலும் பிரஜைகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் செயற்பட்டோருக்கு எதிராக தராதரம் பாராமல் உயர்ந்த பட்ச தண்டனையை வழங்க வேண்டும் என ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ கோரியுள்ளார். மத நல்லிணக்கம் சகோதரத்துவத்தை ஏற்படுத்துவது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

    அளுத்கம வன்முறை தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற் கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

    அளுத்கம பேருவளையில் இடம் பெற்ற மிலேச்சத்தனமான செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கிறேன். இத்தகைய பிரச்சினையை அனைவரும் ஒன்றிணைந்து புரிந்துணர்வுடன் தீர்வுக்கு கொண்டுவர முன்வர வேண்டும் அரசியல் தலையீடுகள் இன்றி அனைத்து மதத்தினரும் சுதந்திரமாக செயற்பட இடமளிக்க கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

    இத்தகைய நிலையில் நமது நாட்டவருக்கு மீண்டுமொரு கறுப்பு ஜூலை அன்றி அனைத்து மக்களின் சௌபாக்கிய வசந்தமே தேவையாகவுள்ளது.

    எனவே இது தொடர்பில் பாதுகாப்பு பிரிவினர் பக்கச்சார்பான முறையில் செயற்பட கூடாது. குறித்த வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் தராதரம் பாராமல் உயர்ந்தபட்ச தண்டனையை வழங்க வேண்டும்.
    -வீரகேசரி
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தராதரம் பாராமல் உயர்ந்த பட்ச தண்டனையை வழங்க வேண்டும்: சஜித் பிரேமதாஸ Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top