குருநாகல- இப்பாகமுவ பன்னல மஸ்ஜித் மீது
இனந்தெரியாதோரால் கல் வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டதை தொடர்ந்து மஸ்ஜித்
மீது கல்லெறிந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தொடர்பில்( படங்கள்)
தொடர்பில் இப்பாகமுவ பன்னல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளது. இத்தாக்குதல் இன்று மாலை இடம்பெற்றதாக
தெரிவிக்கப்படுகிறது பொலிசாருக்கு அறிவிக்கப் பட்டதை தொடர்ந்து
அவர்களை கைது செய்யும் நடவடிக்கை பொலிசாரினால் எடுக்கப் பட்டு வருவதாக
அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெஹிவளை முஸ்லிம் வர்த்தக நிலையம் மீது கல்வீச்சு
தெஹிவளை
ஹில்ஸ்ரீட் இல் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக
நிலையம் ஒன்றின் மீது கல்வீச்சுத் தாக்குதல்
நடாத்தப்பட்டுள்ளது.இத்தாக்குதல் இன்று அதிகாலை இடம்பெற்றதாக
தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதல் தொடர்பில் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.-news time 9:30
0 comments:
Post a Comment