
முஸ்லிம்களுக்கு
எதிரான வன்முறைகளைத் தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது
இலங்கை அரசாங்கத்தின் கடமை என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர்,
சமந்தா பவர், இதுதொடர்பாக கருத்து வெளியிடுகையில்,
இலங்கையில் இடம்பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் மிகவும் கவலையளிக்கின்றன.
இந்த வன்முறைகளைத் தூண்டியவர்களைப் பொறுப்புக்கூற வைக்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் கடமை.
அத்துடன், சிறுபான்மையினர் மற்றும்
வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்க வேண்டியதும் இலங்கை அரசாங்கத்தின்
கடப்பாடாகும் என்றும் அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment