• Latest News

    July 15, 2014

    இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து 16 மணி நேரம் கழித்து காப்பாற்றப்பட்ட 2 மாத குழந்தை!! அதிர்ச்சி வீடியோ

    சிரியாவில் நடந்த உள்நாட்டு தாக்குதலுக்கு ஆளான ஒரு எரிந்த நிலையில் உள்ள கட்டிடத்தில் இருந்து தாக்குதல் நடத 16 மணி நேரத்திற்கு பின்னர் இரண்டு மாத குழந்தை ஒன்று உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி வீடியோ தற்போது உலகம் முழுவதும் சமூக இணையதளங்கள் மூலம் பரவி வருகிறது. சிரியாவில் உள்ள யுடநிpழ என்ற பகுதியில் உள்ள ஒரு பெரிய கட்டிடத்தில் நேற்று இரவு பயங்கர சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்ததால் அந்த கட்டிடமே இடிந்து விழுந்து நொறுங்கியது. ஒருசில இடங்களில் தீ எரிந்து சேதமான அந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு இடையில் ஒரு குழந்தை அழும் குரல் கேட்டு அப்பகுதியில் உள்ளவர்கள் திடுக்கிட்டனர்.
    உடனடியாக அந்த பகுதியில் உள்ளவர்கள் அழுகுரல் கேட்ட இடத்தில் இடிபாடுகளை ஜாக்கிரதையாக அகற்றி குழந்தையை மெதுவாக வெளியே எடுத்தனர். குழந்தைக்கு சிறுகாயம்கூட ஏற்படாமல் இருந்ததை பார்த்து அதிசயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த ஒரு நபர் அந்த வீடியோவை சமூக இணையதளமான டுவிட்டரில் பதிவு செய்தார். இந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து 16 மணி நேரம் கழித்து காப்பாற்றப்பட்ட 2 மாத குழந்தை!! அதிர்ச்சி வீடியோ Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top