• Latest News

    July 13, 2014

    ஈராக்கில் 250 சன்னி சிறைக்கைதிகளை படுகொலை செய்த இராணுவம்

    ஈராக்கில் அரசுப் படைகளும், அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் ஷியா போராளிகளும் சேர்ந்து 255 சன்னி சிறைக்கைதிகளை படுகொலை செய்ததாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

    ஜூன் 9-ம் தேதியில் இருந்து இதுவரை சட்டத்திற்கு புறம்பாக 255 சன்னி கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியிருப்பது போர்க்குற்றத்துக்கான ஆதாரமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளது.

    'ஈராக்கின் மொசூல் உள்ளிட்ட பெரும்பகுதிகளை கைப்பற்றிய ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் அதனை தனி இஸ்லாமிய நாடாக பிரகடனம் செய்தது. இதற்கு பழிதீர்க்கும் வகையில் சன்னி கைதிகளுக்கு மொத்தமாக மரண தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. இது சர்வதேச சட்டத்தை மீறிய செயல்' என்றும் மனித உரிமை கண்காணிப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஈராக்கில் 250 சன்னி சிறைக்கைதிகளை படுகொலை செய்த இராணுவம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top