• Latest News

    July 13, 2014

    கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் உயர்தர விஞ்ஞான மஹிந்தோதய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

    எம்.ஐ.எம்.அஸ்ஹர்: கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் நிர்மாணிக்கப்படவுள்ள மூன்று மாடிகளைக் கொண்ட உயர்தர விஞ்ஞான மஹிந்தோதய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று மாலை கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

    கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , கல்முனைத் தொகுதி அபிவிருத்திக்குழு தலைவரும் கல்லூரியின் பழைய மாணவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும் , கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் கல்லூரியின் பழைய  மாணவர்களுமான ஏ.எம்.ஜெமீல் மற்றும் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் ,
    கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம். ஆகியோர் விசேட அதிதியாகவும் , சாய்ந்தமருது கோட்ட கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ.றஹ்மான் , பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.றஹீம் , கல்முனை மாநகரசபை பிரதி மேயர் ஏ.எம்.பிர்தௌஸ் , கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஏ.பஸீர் , கல்லூரி பழைய மாணவர் சங்க செயலாளர் பொறியியலாளர் ஏ.எம்.அஸ்லம் சஜா , பாடசாலை அபிவிருத்தி சபை செயலாளர்  நிலஅளவையாளர் எம்.ஏ.றபீக் , பொறியியலாளர் ஹலீம் ஜௌஸி , முன்னாள் அதிபர் மர்ஜுனா ஏ காதர் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்

    கல்முனைத் தொகுதியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் மாத்திரமே உயர்தர  வகுப்புகளில் தொழில்நுட்ப பாடநெறி இடம்பெறுவதுடன் இப்பாடநெறியில் கல்முனைக்குடி , சாய்ந்தமருது , மாளிகைக்காடு பிரதேசம் , அம்பாறை மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் , இலங்கையின் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் மாணவர்கள் உள்ளடங்கலாக 400 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது கல்வி பயின்று வருகின்றனர்.

    இம் மூன்று மாடிக்கட்டிடத்திற்கென அரசாங்கம் 25 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளது.

    இம்மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக கல்லூரி வளாகத்தினுள் ஏற்கனவே இரண்டு மாடிகளைக் கொண்ட மஹிந்தோதய ஆய்வு கூடம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.






    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் உயர்தர விஞ்ஞான மஹிந்தோதய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top