• Latest News

    July 13, 2014

    அளுத்கம கூட்டத்தை ரத்து செய்யத் எண்ணியபோது DIG அனுரசேனாநாயக்க முன்னெடுக்க கூறினார் : ஏற்பாட்டாளர்

    boசஹீத் அஹமட்: அளுத்கம :    நான் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவுடன் தொடர்பு கொண்டு ஊரில் பதட்ட நிலை நிலவுவதால் கூட்டத்தை ரத்து செய்து விடலாமா என்று கேட்டேன். அதற்கவர் , பைத்தியமா ( Don’t be silly )- ஹாமதுருகளே  ! நீங்கள் முன்னெடுத்து செல்லுங்கள் எல்லா  வழிகளிலும் நாம் பாதுகாப்பு வழங்குவோம் என்றார் அதன் காரணமாகவே கூட்டத்தை நடத்தினேன் . என கடந்த மாதம் 15 திகதி வன்முறைக்கு  காரணமான அளுத்கமஇடம்பெற்ற கூட்டத்தின் ஏற்பாட்டாளர் என்று அறியப்படும் பாதிராஜகொட ஸ்ரீ விக்கிரம விகாரையின் அதிபதி படல்கும்புரே  ஆரியசாந்த தேரர்  தெரிவித்துள்ளார் .

    சிலோன் டுடே ஆங்கில பத்திரிகைக்கு அண்மையில் வழங்கிய பேட்டியிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார் .

    மேலும் அவர் தெரிவித்துள்ள தகவலில் , உண்மை நிலையை கண்டறியவே அளுத்கமையில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தேன் பிக்குவை தாக்கியவர்களில் ஒருவரே கைது செய்யப்பட்டார். இந்த பகுதி பொலிசாரினால் பிக்குகளுக்கு நீதி போதுமானதாக வழங்கப் படவில்லை , பிக்குவை தாக்கிய   மூவருக்கும் நீதி வழங்கப் படவேண்டும். (இந்த பகுதி) போலீசார் அவர்களை கைது செய்யவில்லை உண்மை நிலையை கண்டறியவே 15 ஆம் திகதி மாநாட்டை ஏற்பாடு செய்தோம் . இக் கூட்ட ஏற்பட்டு முஸ்லிம்களு எதிரானது அல்ல இக் கூட்டத்திற்கு BBS  அழைக்கப் படவில்லை பெளத்த தேரர்   என்ற வகையில்  ஞானசார  தேரர் மட்டும் அழைக்கப்பட்டிருந்தார் .
    ALUஅருகாமையில் இருக்கும் மஸ்ஜித் எங்கள் மீது தாக்குதல் நடாத்த திட்டமிடுவதாக எமக்கு தகவல்கள் கிடைத்தது கூட்டம் ஏற்பாடு செய்யபட்டிருந்த அன்று நான் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவுடன் தொடர்பு கொண்டு ஊரில் பதட்ட நிலை நிலவுவதால் கூட்டத்தை ரத்து செய்து விடலாமா என்று கேட்டேன் . அதற்கவர் ,பைத்தியமா (Don’t be silly) துறவியார்களே ! நீங்கள் முன்னெடுத்து செல்லுங்கள் எல்லா  வழிகளிலும் நாம் பாதுகாப்பு வழங்குவோம் என்றார். என அவர் தெரிவித்துள்ளார் .
    நான் BBS அமைப்பில் தான் உறுப்பினர் இல்லை என கூறும் இவர்  பொது பல சேனாவின்  செயலாளர்  ஞானசார தேரர் தன்னை  அந்த அமைப்பில் இணையுமாறு அழைப்பு விடுத்தால் இணைவேன்  எனவும் தெரிவித்துள்ளார் . மேலும் அந்த போட்டியில் அவர் பொது பல சேனா வன்முறைக்கு காரணமல்ல பிக்குவை தாக்கிய முஸ்லிம்  தீவிரவாதிகள்தான் காரணம் பொலிசார் ஒருவரை மட்டும் கைது செய்தமைதான் பிரச்சினைக்கு பிரதான காரணம் எனவும் தெரிகின்றார் .
    அதேவேளை பிக்கு தாக்கப்பட்டதாக தெரிவிக்ககும்  இவர்களில் குற்றசாட்டு சோடிக்கப்பட்டது நேரில் பார்த்தவர்களை ஆதாரம் காட்டி அளுத்கம , தர்ஹா நகர் முஸ்லிம்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
    CT
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அளுத்கம கூட்டத்தை ரத்து செய்யத் எண்ணியபோது DIG அனுரசேனாநாயக்க முன்னெடுக்க கூறினார் : ஏற்பாட்டாளர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top