• Latest News

    July 19, 2014

    மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்திய விவகாரம்: ரஷ்யா மீது ஒபாமா குற்றச்சாட்டு

    மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் எம்.எச்.-17 விமானம் நேற்று உக்ரைன் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் பயணம் செய்த 298 பேரும் இறந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக உக்ரைன் அரசும், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்து வருகின்றனர்.

    உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் பற்றி அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியதாவது:-
    உக்ரைனில் உள்ள நெருக்கடியை அதிகரிக்கும் வகையில் இப்போது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு கிட்டத்தட்ட 300 பேர் பலியாகி உள்ளனர். இதில் அமெரிக்கர் ஒருவரும் இறந்துள்ளார்.

    ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் பகுதியில் இருந்து ஏவுகணை மூலம் விமானம் தாக்கப்பட்டதற்கு ஆதாரம் உள்ளது. கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த ரஷ்யா தவறிவிட்டது. உக்ரைன் நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் செயலில் ரஷ்யா ஈடுபடுகிறது.

    பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் இறந்துள்ளதால், என்ன நடந்தது என்பது குறித்து நம்பகமான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். முழு விசாரணையையும் சுதந்திரமாக நடத்த அனுமதிக்கும் வகையில், உக்ரைன்-ரஷ்யா ஆதரவு படைகள் உடனடியான போரை நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்திய விவகாரம்: ரஷ்யா மீது ஒபாமா குற்றச்சாட்டு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top