இஸ்ரேல்-காஸா பிரச்சனையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று
மாநிலங்களவை சபாநாயகர் ஹமீது அன்சாரிக்கு சுஷ்மா சுவராஜ் கடிதம்
எழுத்தியுள்ளார்.
காஸா பகுதியில் அப்பாவி பொதுமக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்
நடத்துவதை மத்திய அரசு கண்டிக்கவேண்டும் என்று கோரி பாராளுமன்றத்தில்
எதிர்க்கட்சிகள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நடவடிக்கைகள்
முடங்கின.
காஸாவில் நடைபெறுவது குறித்து பேசுவது சரியானது இல்லை. இது குறித்து
பாராளுமன்றத்தில் விவாதித்தோம் ஆனால் இரு நாடுகள் இடையிலான நமது நட்புறவு
பாதிக்கும் என்று சுஷ்மா சுவராஜ் கூறினார்.
இவ்விவகாரத்தினால் பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் அவை
15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தொடங்கியதும் அமளி நீடித்ததால்
அவை 2 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment