சுலைமான் றாபி:கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீனின்
5வது "வாழ்வின் ஒளி" வாழ்வாதார நிகழ்வும் இப்தார் நிகழ்வும் இன்று
19.07.2014 நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தலைவரும்
அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.
உதுமாலெவ்வை, நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் முன்னாள் தலைவர் அல்ஹாஜ் இமாம்
மௌலவி, அமைச்சரின் இணைப்புச் செயலாளர்கள் மற்றும் கல்விமான்கள் அனைவரும்
கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நீர் இணைப்புக்கள், சுயதொழில் முயற்சிகள்,
பள்ளிவாசல் புனரமைப்பு, பாடசாலை அபிவிருத்தி மற்றும் விளையாட்டுக்
கழகங்களின் அபிவிருத்திகளுக்கான காசோலைகளும் அதிதிகளால் பயனாலிகளுக்கு
வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.



0 comments:
Post a Comment