பாரூக் சிகான்: புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக முஸ்லீம்
மஜ்லீஸுக்கு ஒரு தொகுதி பேரிச்சம்பழங்கள் மக்கள் பணிமனையில் வைத்து
வழங்கப்பட்டன.
நேற்று மாலை மஜ்லீஸ் அமைப்பின் தலைவர் எச்.எம்.எம். ஹலீம், உப தலைவர்
ஏ.என்எம்.அர்சாத் ஆகியோரிடம் சுமார் 160 கிலோ பெறுமதியான இப்பழங்களை
யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட மக்கள் நிலைய மக்கள் பணிமனை தலைவரும், யாழ்
மாநகர சபை உறுப்பிருமான பி.ஏ.எஸ் சுபியான் (மௌலவி) வழங்கி வைத்தார்.
இதே வேளை இப்பகுதி மக்களுக்கு வழங்கவென மக்கள் பணிமனையினால் பள்ளிவாசல்
நிர்வாகத்தினருக்கு பகிர்ந்தளிக்கும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment