முஸ்லிம் பெற்றோர் தமது கலாசார உடைகளுடன்
பாடசாலைக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
என தகவல்கள் குறிப்பிடுகின்றன . தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பாலிகா வித்தியாலத்திற்குள்
முஸ்லிம் பெற்றோர் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதிக்கப்படாமைக்கு எதிராக
பெற்றோர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு இன்று பிரதம
நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான நீதியரசர் குழுவின் முன் விசாரணைக்கு
எடுக்கப்பட்டது.
ஹஜாப் அணிந்து பாடசாலைக்கு சென்ற போது
பாடசாலை அதிபர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என மனுதாரான பெற்றோர்களில்
ஒருவர் கூறியுள்ளார். இதே பாடசாலை அதிபர் அங்கு பயிலும் இரண்டு முஸ்லிம்
மாணவிகள் அணிந்து சென்ற பஞ்சாபி உடையை அணிந்து பாடசாலைக்கு வரக் கூடாது என
அறிவித்திருந்தார்.
இது தொடர்பான வேறு ஒரு அடிப்படை உரிமை
மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் அது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம்
திகதி விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.
0 comments:
Post a Comment