அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் நோன்புப் பெருநாள் வாழ்த்து
பி.எம்.எம்.ஏ.காதர்: உலகலாவிய ரீதியில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும்; இனவாத, மதவாத செயற்பாடுகள் ஒழிக்கப்பட்டு முஸ்லீம்கள் நிம்மதியாக வாழும் சூழ்;நிலை உருவாக இப்புனித நாளில் பிரார்திப்போம.;
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றம் வணிகத்துறை அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் செய்தியில் வேண்டுகோள் விடத்துள்ளார்.
நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் மேலும் தெரிவித்திருப்பதாவது :-
முப்பது நாட்களாக நோன்பு நோற்று றப்பில் கலமின் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்று இன்று புனித நோன்புப் பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும்; எனதும் எனது கட்சியின் சார்பாகவும் வாழ்த்துக்களைக் கூறுவதில் மட்டற்ற மகிழச்சியடைகின்றேன். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றம் வணிகத்துறை அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் செய்தியில் வேண்டுகோள் விடத்துள்ளார்.
நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் மேலும் தெரிவித்திருப்பதாவது :-
உலகலாவிய ரீதியில் இன்று நாம் பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இத்தருனத்தில் மறுபுறம் குறிப்பாக பலஸ்த்தீனில் எமது சமூகம் மிகப் பெரும் கொடூரமான சூழ் நிலைக்குள் சிக்கி தத்தளித்துக் கொண்டிருப்பதை நினைக்கும் போது எம் உள்ளங்கள் வெடித்துச் சிதறிவிடும் போல் உள்ளது.
பளஸ்தீனில் மட்டுமன்றி உலகம் பூராகவுமுள்ள முஸ்லீம்கள் இன்று இனவாத மதவாத வெறியர்களால் துவம்சம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய அபாய நிலை தொடர்ந்த வண்ணமேயுள்ளது.
புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒரே ஒரு காரணத்துக்காகவே இன்று முஸ்லிம்கள் யூதர்களாலும் நாசாராக்களாலும் அதிக துன்பத்தை எதிர்நேக்கி வருகின்றனர்;.
பல பில்லியன் கோடி பெறுமதியான முஸலீம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு ம் அழிக்ப்பட்டும் பள்ளிவாசல்கள் குர்ஆன் என தீக்கிரையாக்கபபட்டும் வெறிபிடித்தாடும் இக் கொடூரமிக்கவர்களிடமிருந்து எமது சமூகத்தை நாம் காப்பாற்ற அணைத்து முஸ்லீம்களும் ஒன்று படுவதே இந்த கொடூரர்களுக்கு நாம் கற்பிக்கும் தகுந்த பாடமாக அமையும் என்பதை இச்சந்தரப்பத்தில் வேண்டிக்கொள்கின்றேன்.
எனவே நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் மட்டுமன்றி உலகிலுள்ள முஸ்லீம் நாடுகளில் வாழும் முஸ்லிம்களும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளிலுள்ள எமது உறவுகளும் அனுபவிக்கும் அனைத்துத்துயரங்களும் அகதி வாழ்க்கை முறையும் ஒழிந்து கௌரவமிக்க நிம்மதியான வாழ்க்கைப்பயணம் அமைய இந்நாளில் இறைவனிடம் மன்றாட்டமா துஆ செய்வோம்.

0 comments:
Post a Comment