• Latest News

    July 29, 2014

    எதிர்காலத்தில் சிறந்த ஆட்சி மலர பிரார்த்திப்போம்: ஐ. தே. க அம்பாரை மாவட்ட பிரச்சாரச் செயலாளர் எஸ்.அப்துஸ் ஸலாம்

    எஸ்.அஷ்ரப்கான்: இனிய றமழான் மாதம் பகல் முழவதும் பசியுடனும் தியாகத்துடனும் நோன்பு நோற்று பெருநாளைக் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாரை மாவட்ட பிரச்சாரச் செயலாளர் எஸ்.அப்துஸ் ஸலாம் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

    அவர் மேலும் குறிப்பிடும்போது,

    நோன்பிருந்ததன் மூலம் ஏழைகளின் பசியையும் வறுமையையும் உணர்ந்துகொண்டது மட்டுமல்லாமல், அழ்ழாஹ்வின் கட்டளைக்கு முழுக்க அடிபணிந்தவர்களாக இன்று நாம் பெருநாளைக் கொண்டாடுகின்றோம்.
    இந்த இனிய பெருநாள் தினத்தில் எமது சமூகத்தவர்களுடனும், பிற சமூகத்தவர்களுடனும் ஒற்றுமையுடனும் வாழ்ந்து இன்பதுன்பங்களில் பங்கெடுக்கும் உன்னத பணியை செய்ய முஸ்லிம் சமூகம் அனைத்தும் முனவர வேண்டும்.

    அதேவேளை இன்று நாம் சந்தோசமாக வாழ்கின்ற பெருநாளைக் கொண்டாடுகின்ற நிலையில் உலகின் பல பிரதேசங்களிலும் பல்வேறு துன்பங்களுடன் எமது இரத்தங்கள் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். இவர்களுக்காக காபீர்களின் கைகளை முடக்க வேண்டி இரு கை ஏந்தி நாம் அனைவரும் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.

    மேலும் இலங்கையில் இன்றுள்ள சூழலில் முஸ்லிம்கள் பொறுமையுடன் வாழ்ந்து எதிர்காலத்தில் சிறந்த ஆட்சி மலர பிரார்த்திப்பதோடு எமக்கு முன்னுள்ள சவாலை புத்திசாதுரியத்துடன் எதிர் கொள்ள முனைவோமாக அதற்கு இறைவன் எமக்கு அருள்பாலிப்பானாக!
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எதிர்காலத்தில் சிறந்த ஆட்சி மலர பிரார்த்திப்போம்: ஐ. தே. க அம்பாரை மாவட்ட பிரச்சாரச் செயலாளர் எஸ்.அப்துஸ் ஸலாம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top