• Latest News

    July 25, 2014

    இஸ்ரேலிய படை வீரர்களை மண்டியிடச் செய்து சங்கிலியால் பிணைத்த ஹமாஸ் போராளிகள் (படங்கள்)

    இஸ்ரேல் மற்றும் காஸா பிராந்திய மோதல்களின் போது தம்மால் பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய படை வீரர்களை  சங்கிலியால் பிணைத்து மண்டியிட்ட நிலையில் ஹமாஸ்  போராளிகள் என சந்தேகிக்கப்படும் ஆயுததாரிகள் சுற்றி வளைத்திருப்பதை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    காஸா பிராந்தியத்திலிருந்து இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக காஸாவிற்குள் இஸ்ரேலிய படையினர் நுழைந்த போது அவர்களை பிடித்த ஹமாஸ் போராளிகள் அவர்களை  சங்கிலியால் பிணைத்து அவரவர் தலைகளில் கைகளை வைத்தவாறு முழங்காலில் இருத்தி வைத்துள்ளனர். அத்துடன் கண்கள் கட்டப்பட்டு சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் நால்வர் நடந்து செல்லும் காட்சியும் புகைப்படமாக்கப்பட்டுள்ளது.

     காஸா பிராந்தியத்தில் இரு வாரங்களுக்கு முன் இஸ்ரேல் தாக்குதல்களை ஆரம்பித்ததில் இருந்து இது வரை 190 சிறுவர்கள் உட்பட 290 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இஸ்ரேலிய தரப்பிலும் முப்பது படை வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இஸ்ரேலிய படை வீரர்களை மண்டியிடச் செய்து சங்கிலியால் பிணைத்த ஹமாஸ் போராளிகள் (படங்கள்) Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top