எல்லோரிடமும் ஒரு கேள்வி எழுகிறது. ஏன்
இஸ்ரேலிய இராணுவம் காஸாவினுள் புகாமல் தாமதிக்கிறது. அதற்கான காரணம் என்ன?
என்பதே
அது. இதோ அதற்கான விடை..
யூதர்கள் வீசும் ஒவ்வொரு குண்டிற்கும்
இரையாகும் குடும்பங்களில் இருந்து அந்த ஜனாஸாவை அடக்கிய மறுகணமே
தங்களை Ash-Shaheed Brigade பிரிவில் இணைக்குமாறு வேண்டி நிற்கின்றனர் அதன்
குடும்பத்தினர். இது உலகில் எங்கும் நிகழாத அதிசயம்.
Merkava tanks. இஸ்ரேலின்
தரைப்போர்ப்பலத்தில் பிரதான பாத்திரம் வகிப்பது. இதன் உதவியுடன் தான் யூத
இராணுவம் தனது ஆக்கிரமிப்பிற்கான முன்னேற்ற நகர்வுகளை ஆரம்பிப்பது வழமை.
லெபனான் சண்டைகளிலும், கடந்த காஸா முற்றுகையின் பின்னான ஊடுருவலிலும் பலத்த
அடி வாங்கியது இந்த படையணி. Mark-01, Mark-02, Mark-03, Mark-04 என இவை
நான்கு வகையினை கொண்டுள்ளது. நவீன ரகம் Mark-04 ஆகும். 120mm சுடுகுழலை
கொண்டது. 1500hp இயந்திர வலுவையுடையது இது. அமெரிக்க தொழில்நுட்பத்துடன்
கூடிய இஸ்ரேலின் சொந்த தயாரிப்பு.
( இஸ்ரேல் – ஹிஸ்புல்லாஹ் யுத்தத்தின் போது நொறுக்கப்பட்ட தாங்கிகள் )
Merkava tank பற்றி ஒரு இஸ்ரேலிய ஜெனரல்
இவ்வாறு கூறினார். “அது தொடர்ந்து நகர்ந்தால் வெற்றி எம்மை நோக்கி வரும்.
அது பின்புரமாக நகர ஆரம்பித்தால் வெற்றி எதிரிகளை நோக்கி வரும். அதனை
நாங்கள் “தரையுத்தத்தின் கடவுளாகவே” பார்க்கிறோம்” என்றார்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் காஸாவிற்கு வடக்கேயமைந்துள்ள Zekim
military base படை முகாமில் உள்ளMerkava tank-ஐ அல்-கஸ்ஸாமின் வீரமரண
தாக்குதல் அணியினர் அழித்தொழித்துள்ளனர். Bait Lahiya அமைந்துள்ள பயிற்ச்சி
முகாம் இது. இதனை ஊடறுத்து சென்ற படையணியினர் துப்பாக்கி சமரை நடாத்திய
அதே வேளை இந்த டாங்கிகள் மீது ரொக்கெட் தாக்குதலை நிகழ்த்தி அதில் ஒரு
டாங்கிளை நிர்மூலம் செய்துள்ளனர். தாக்குதலின் காரணமாக பெரும்
தீச்சுவாலையுடன் அது பற்றி எரிந்த வீடியோ கிளிப்பினை ஹமாஸ்
வெளியிட்டுள்ளது. எந்த வகையான புரபெல்ட் ரொக்கெட்டை கொண்டு இவர்கள் இதனை
தாக்கினர் என்பது பற்றி ஹமாஸ் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
ஆனால் தங்கள் தாக்குதல் வெற்றிகரமாக நிறைவேறியதாகவும், முழு இலக்கையும்
அழிப்பதல்ல தங்கள் நோக்கம் என்றும் அந்த ஒப்பரேசனில் இஸ்ரேலிய இராணுவத்தின்
பெரிய பலமான கருதப்படும் Merkava டாங்கிகளை தம்மால் தாக்கியழிக்க முடியுமா
என்பதற்கான ஒரு பரீட்சார்த்த நடவடிக்கையே இது என்றும் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை ஹமாஸ் ”War leaves eaten by caterpillars” என
பெயரிட்டுள்ளது.
Merkava டாங்கிகளை இலகுவில் அழிக்க முடியாது. அதன் லேசர் கைடட் எலர்மிங்
சிஸ்டம் தன்னை நோக்கி வரும் பொருட்களை இனங்காட்டுவதுடன் துல்லியமாக அதன்
மீது செக்கனிற்கு 06 ரவுண்டுகள் கலிபர் துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்த
வல்லது. அப்படியானால் இதனை தாக்குவது எப்படி?
ஆக, இஸ்ரேலிய தளபதி கூறிய “தரை யுத்தத்தின் கடவுளை” அழிக்க இப்போது
ஹமாஸின் கரங்களில் ஆயுதம் தயார். இந்த தாக்குதலின் காரணமாகவே இஸ்ரேலிய
இராணுவம் தடாலடியாக காஸாவினுள் புகுந்து வெறியாட்டம் செய்ய முடியாமல்
தாமதிக்கிறது. தாக்குதலிற்கு உள்ளான தளத்தில் அதனது துல்லியமான பைனல்
ரிப்போட்டிங்கின் பிரகாரம் உபயோகப்படுத்தப்பட்டது கோர்நெட் ரக ஏவுகணைகள்
என்றால் அவற்றில் எத்தனை ஹமாஸின் இராணுவப்பிரிவிடம் இருக்கிறது. அது
எங்கெல்லாம் இருக்கிறது போன்ற கேள்விகளிற்கு இஸ்ரேலிய இராணுவத்திடம்
குறைந்தபட்சம் அண்ணளவான விடைகளாவது கிடைக்க வேண்டும். அது அல்லாமல்
தன்னிடம் இருக்கும் 400 மர்கவா டாங்கிகளை காஸாவில் தாரைவார்க்க அது
தயாரில்லை.
0 comments:
Post a Comment