• Latest News

    August 06, 2014

    வெளிவரும் இரகசியம் ? 880 இஸ்ரேலியர்கள் மரணம், 1861 பேர் காயம் !!

    கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த ஹமாஸ் – இஸ்ரேல் யுத்தத்தில் இஸ்ரேலியத் தரப்பில் 880 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஒரு புதுத்தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை இஸ்ரேலின் பிரபல பத்திரிகையான  “Haartez” இன் நிருபர்களில் ஒருவராகிய “ஆமூஸ் ஹாரீல்” என்பவர் தெரிவித்துள்ளார்.

    அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “கடந்த ஆகஸ்ட் 2ம் திகதி கூடிய இஸ்ரேலின் அமைச்சரவைக் கூட்டத்தில் இஸ்ரேல் இதுவரை சந்தித்துள்ள இழப்புக்கள் பற்றிய ஒரு அறிக்கை வழங்கப்பட்டது. இவ்வறிக்கையில் இந்த ஒரு மாத காலப்பகுதியில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய படைவீரர்கள், அதிகாரிகள், தற்கொலை செய்துகொண்டவர்கள், காயப்பட்டவர்கள் போன்ற அனைவரினதும் விபரங்கள் தெரிவிக்கப்பட்டன.

    இவ்வறிக்கையில் உள்ள பிரகாரம், இதுவரை 497 வீரர்களும், 113 அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இது தவிர ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் காயத்திற்குள்ளாகியுள்ளனர்.

    இது தவிர, 166 படையினர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும், இன்னும் 311 படைவீரர்கள் யுத்தத்திற்குச் செல்லாமல் இருக்க தங்களைத் தாங்களே சுட்டுக்கொண்டதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இத்தகவலை குவைதில் இருந்து வெளிவரும் பிரபல் சஞ்சிகையான “அல்முஜ்தமாஹ்” தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வெளிவரும் இரகசியம் ? 880 இஸ்ரேலியர்கள் மரணம், 1861 பேர் காயம் !! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top