• Latest News

    August 29, 2014

    கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அணி வெற்றி

    எஸ்.அஷ்ரப்கான்:இலங்கை பாடசாலைகள் பேரவை மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை இணைந்து நடாத்திய 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான பாடசாலை கிரிக்கெட் சுற்றுப்போட்டி 2014 போட்டியின் காலிறுதி போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அணி வெற்றிபெற்று அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

    நேற்று செவ்வாய் கிழமை (26) வெல்லவாய சீனித் தொழிற்சாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அணியை எதிர்த்து  கொழும்பு சென். ஜோசப் கல்லூரி அணி மோதியது.

    50 ஓவர்களைக் கொண்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய  கொழும்பு சென் ஜோசப் கல்லூரி அணி 50 ஓவர்கள் முடிவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 177 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அணி 45 ஓவர்களை மட்டுமே  சந்தித்து அணி வீரர்களின் அபார துடுப்பாட்டத்தினால் 06 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து,179 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றனர்.இதன் மூலம் அரையிறுதி ஆட்டத்திற்கு கல்முனை தேசிய பாடசாலை அணியினர் தெரிவாகியுள்ளனர் என இப்பாடசாலை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும், உடற்கல்வி ஆசிரியருமான ஏ.பைஸர் தெரிவித்தார்.

    கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அணி விளையாட்டுத்துறையில் அண்மைக்காலமாக பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். இதற்கு முழு ஒத்துழைப்பையும் நெறிப்படுத்தலையும் பாடசாலையின் அதிபர் பி.எம்.எம்.பதுறுதீன் மற்றும் உதவி அதிபர் யு.எல்.எம். ஹமீட் ஆகியோர் வழங்கிவருகின்றனர். அதற்காக பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் சார்பாக அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்ககொள்வதாக இப்பாடசாலை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும், உடற்கல்வி ஆசிரியருமான ஏ.பைஸர் மேலும் குறிப்பிட்டார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அணி வெற்றி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top