• Latest News

    August 30, 2014

    ஆளும் கட்சியின் வேட்பாளர்களுக்கு சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் யார் என்பது தெரியாது: டியூ. குணசேகர

    ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்கள்இ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் யார் என்பதை அறியாதிருப்பதாக சிரேஷ்ட அமைச்சர் டி.யூ. குணசேகர தெரிவித்துள்ளார்.

    கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
    தேர்தலில் போட்டியிடும் படித்த புத்திசாலிகள் எனக் கூறிக்கொள்பவர்களும்இ முன்னாள் அமைச்சர்களும் இதில் அடங்குகின்றனர்.

    ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட விரும்பிய வேட்பாளர்களுக்கு நேர்முகப் பரீட்சையை நடத்தும் போது இந்த விடயத்தை தாம் அறிந்து கொண்டதாகவும் டியூ. குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியூ. ஆர். டி. பண்டாரநாயக்க என்பது குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஆளும் கட்சியின் வேட்பாளர்களுக்கு சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் யார் என்பது தெரியாது: டியூ. குணசேகர Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top