பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி் 2-1 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியது.
 இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை பறிகொடுத்தது.
இந்நிலையில் ஒருநாள் போட்டி தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி
இலங்கையை வீழ்த்தியது. அதே போல் 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி,
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது.
இதைத் தொடர்ந்து 3வது ஒருநாள் மற்றும் கடைசி போட்டி ரங்கிரி தம்புள்ள சர்வதேச அரங்கத்தில் இன்று நடக்கிறது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடியது.
ஆனால் இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்க வீரர்கள்
அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அகமது சிகாட்(10), ஷர்ஜீல் கான்(0), முகமது ஹபீஸ்(1), அணித்தலைவர்
மிஸ்பா-உல்-ஹக்(18), உமர் அக்மல்(7), சொகிப் (7), அப்ரிடி(2), ரியாஸ்(0),
அஜ்மல்(6), இஃரான்(5) ஆகிய அனைவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.
அதிகபட்சமாக ஃபார்ட் அலாம் மட்டும் 38 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முன்னதாக மழை காரணமாக ஆட்டம் சிறிது நேரம் தடை செய்யப்பட்டது. பின்னர் 48 ஓட்டங்களாக குறைக்கப்பட்டு ஆட்டம் தொடர்ந்தது.
ஆனால் இலங்கை பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாத பாகிஸ்தான் 32.1
ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ஓட்டங்கள் மட்டுமே
எடுத்தது.
இலங்கை தரப்பில் பெரேரா 4 விக்கெட்டுகளையும், பிரசாத் 2
விக்கெட்டுகளையும், மலிங்கா,ஹேராத், பிரசன்னா தலா ஒரு விக்கெட்டையும்
கைப்பற்றினர்.
103 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை
அணி, 18.2 ஓவர்களில் 3 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை எட்டியது.
தரங்கா (14), சங்கக்காரா (2), ஜெயவர்த்தனே (26) அடுத்தடுத்து ஆட்டமிழக்க
டில்ஷான் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 55 பந்துகளில் 50
ஓட்டங்கள் குவித்தார்.
இஃப்ரான், ரியாஸ், அஜ்மல் தலா 1 விக்கெட்டுகளை மட்டும் வீழ்த்தினார்.
கடைசியில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தி பாகிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட்
தொடரை தொடர்ந்து ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.
|
0 comments:
Post a Comment