• Latest News

    August 12, 2014

    அறிவு பூர்வமான சிந்தனையே அறிவுள்ள சந்ததியை உருவாக்கும் : லிபரல் கட்சித் தலைவர் எம்.எம்.இஸ்மாயில்

    எம்.வை.அமீர்: இன்றைய கால ஓட்டத்தில் மானிட முன்னேற்றத்துக்கு கல்வியே தலையாயது, என முஸ்லிம் லிபரல் கட்சியின் தலைவர் எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.

    மக்கள் அறிவு பூர்வமாக சிந்திக்க ஆரம்பிக்கும் போது தான் குறித்த சிந்தனையாளர்கள் பெருகும் உலகில் பாரிய முன்னேற்றத்தைக் காணமுடியும்.

    சமூக அபிவிருத்தி ஐக்கிய ஒன்றியத்தின் ஏற்பாட்டில், 2013ம்ஆண்டு தரம் 5ல் கல்முனைமாநகர எல்லைக்குள்,  புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த தமிழ் முஸ்லிம் மாணவர்களை கௌரவிக்கும் விழா,2014-08-09ல் சாய்ந்தமருது லீ மெரிடியம் வரவேற்பு மண்டபத்தில், சமூக அபிவிருத்தி ஐக்கிய ஒன்றியத்தின் தலைவர் எம்.ஐ.எச்.ஜமால் தலைமையில் இடம்பெற்றது.

    இங்கு தொடர்ந்து உரையாற்றிய எம்.எம்.இஸ்மாயில் (சிரேஷ்ட கணக்காளர்), புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த இவ்வாறான மாணவர்களை கௌரவிக்கும் இதுபோன்ற நிகழ்வுகளானது குறித்த மாணவர்களை இன்னும் உற்சாகப்படுத்துவதுடன், ஏனைய மாணவர்களை இது போன்ற கௌரவங்களை தாங்களும் பெறவேண்டும் என்ற ஆசைகளையும் ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

    புலமைபரிசில் பரீட்சையில் தங்களது பிள்ளைகள் சித்தியடைய உழைத்த பெற்றோர், இம்மாணவர்களுக்கு கூறவேண்டிய 17 கட்டளைகளையும் சிந்தனைகளையும் இங்கு தெரிவித்தார். அதாவது;

    01.   உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் உண்மையானவர்களும் அல்ல என்பதையும் அதேபோல் அனைத்து மனிதர்களும் நேர்மையானவர்களும் இல்லை உங்களது பிள்ளைகளுக்கு விளங்க வைக்க வேண்டும்.

    02.   ஆனால் மனிதர்களில் அயோக்கியர்களுக்கு மத்தியில் உண்மையான நேர்மையான மக்களும் வாழ்கிறார்கள் என்பதை உங்களது வளரும் குழந்தைகளுக்கு ஊட்டுங்கள்.

    03.   சுயநல அரசியல்வாதிகளுக்கிடையே அர்ப்பணிப்பு மிக்க தலைவர்களும் இருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள்.

    04.   ஏமாற்றிப் பிழைப்பதை விடவும் தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதை மாணவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

    05.   எதற்கு எடுத்தாலும் பயந்து ஒதுங்கிச்செல்வது கோழைத்தனம் என்பதை உங்களது பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறுங்கள்.

    06.   புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவர்களுக்கு திறந்து காட்டுங்கள்.

    07.   மற்றவர்கள் தவறு என்று விமர்சித்தாலும் தனது சுய சிந்தனைமீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைக்க அவர்குக்கு கற்றுக்கொடுங்கள்.

    08.   மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும் கடினமான குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் பழகுவதற்கு அவர்களுக்கு பயிற்சி கொடுங்கள்.

    09.   கும்பலோடு கும்பலாக சேர்ந்து விடாமல் எந்த சூழ்நிலையிலும் தனது சொந்த நம்பிக்கைப்படி சுயமாக தொழில்படும் தைரியத்தை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.

    10.   துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். அதேசமயம் கண்ணீர் விடுவதில் தவறில்லை என்பதையும் அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள்.

    11.   அனைத்து மனிதர்களது குரலுக்கும் அவர்களைச் செவிசாய்த்து கேத்கச்சொல்லுங்கள். எனினும் உண்மையை மட்டும் அதில் பிரித்தெடுத்துக் கொள்ள அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.

    12.   பெரும் கும்பலாக வந்து கூச்சலிட்டாலும் நியாயம் என்பதை நிலைநாட்ட தொடர்ந்து போராடுவதற்கு அவர்களுக்கு நம்பிக்கையுட்டுங்கள்.

    13.   அவர்களை அன்பாக நடத்துங்கள் அனால் அதிகம் செல்லம் காட்டாதீர்கள். ஏனனில் அன்பு மட்டும்தான் பின்னர் பயன்மிக்கதாக மாறுகிறது.

    14.   அவர்களை தங்கள் மெது நம்பிக்கை வைக்க கற்றுக்கொடுங்கள். அப்போதுதான் மனித குலத்தின் மீது அவர்கள் மகத்தான நம்பிக்கை கொள்வர்.

    15.   தவறைக் கண்டால் கொதித்து எழும் துணிச்சலை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். அதே நேரம் பொறுமையின் வலிமையை அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள்.

    16.   உலகத்தின் இயற்கையை ரசிப்பதற்கு அவர்களுக்கு வழிகாட்டுங்கள்.

    17.   உங்களது குழந்தைகளுக்கு கல்வியுடன் சேர்த்து ஒழுக்கத்தினையும் இறைபாதையில் நாட்டத்தினையும் கற்றுக்கொடுங்கள். அப்போது கல்வியும் ஒழுக்கமும் இணையும் போது அவர்கள் எதிர்காலத்தில் நற்பிரசையாக உலகில் திகழ வழிவகுக்கும். என்றும்
    பெற்றோர்களும்  ஆசிரியர்களும் தங்களது மாணவச் செல்வங்களுக்கு நல் வழிகட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அறிவு பூர்வமான சிந்தனையே அறிவுள்ள சந்ததியை உருவாக்கும் : லிபரல் கட்சித் தலைவர் எம்.எம்.இஸ்மாயில் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top