வன்முறைகளுக்கு மத்தியில் தேர்தல் ஆணையாளர்
வானொலிகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கு எவற்றையோ கூறி, தனது கடமையை ஒதுக்கி
வைத்து விட்டு, செவ்விகளை மாத்திரம் வழங்கி வருகிறார். தேர்தல் வன்முறைகள் பற்றி தேர்தல் ஆணையாளரிடம் கூறினால்,
நீதிமன்றத்திற்கு செல்லுமாறு கூறுகிறார். அப்படி கூறுவதற்கு தேர்தல்
ஆணையாளர் ஒருவர் தேவையில்லை. என ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க
தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வேட்பாளர்கள்
மீது தாக்குதல் நடத்திஇ பிரசார மேடைகளை உடைத்து, அலுவலகங்கள் மீது
துப்பாக்கி பிரயோகம் செய்து, அச்சுறுத்தல் விடுத்து, ராஜபக்ஷவினர்
தேர்தலுக்கு தயாராகவில்லை. அவர்கள் வன்முறைக்கு தயாராகி வருகின்றனர்.
படால்கும்புர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.-TC

0 comments:
Post a Comment