
நடந்து முடிந்திருக்கும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும், கடந்த தேர்தல்களையும் விட அது பாரிய பின்னடைவைச் சந்தித்திருப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2009 தேர்தலை விடவும் ஆளுங்கட்சிக்கு இம்முறை 69000 வாக்குகளில் சரிவு ஏற்பட்டிருப்பதோடு, அரசு இம்முறை 06 உறுப்பினர்களையும் கூட இழந்துள்ளது.
போனஸ் ஆசனம் உட்பட கடந்த முறை 25 ஆசனங்களை வென்ற பொதுஜன ஐக்கிய முன்னணி இம்முறை போனஸ் அடங்கலாக 19 உறுப்பினர்களை மட்டுமே வென்றுள்ளது.கடந்த 2009 தேர்தலை விடவும் ஆளுங்கட்சிக்கு இம்முறை 69000 வாக்குகளில் சரிவு ஏற்பட்டிருப்பதோடு, அரசு இம்முறை 06 உறுப்பினர்களையும் கூட இழந்துள்ளது.
கடந்த தேர்தலில் 418,906 வாக்குகளைப் பெற்றிருந்த ஆளுந்தரப்பு இம்முறை 349,906 வாக்குகளையே பெற்றிருக்கிறது.
இதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் கடந்த தேர்தல்களை விடவும் இம்முறை வீறுநடை போட்டுப் பிரகாசித்திருப்பதாக அவதானிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
2009 தேர்தலில் 129,144 வாக்குகளைப் பெற்றிருந்த ஐ.தே.க இம்முறை 274,773 வாக்குகளைப் பெற்று 145,629 மேலதிக வாக்குகளால் தனது வாக்கு வங்கியை மெருகேற்றிக் கொண்டுள்ளது.
அத்துடன் ஐ.தே.க. இம்முறை 07 உறுப்பினர்களை மேலதிகமாகவும் ஈட்டிக்கொண்டுள்ளது.
தவிர, கடந்த தேர்தலில் 14,639 வாக்குகளைப் பெற்ற மக்கள் விடுதலை முன்னணி இம்முறை 21,941 வாக்குகளை மேலதிகமாகப் பெற்றுள்ளது. இம்முறை இரு உறுப்பினர்களோடு அக்கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 36,580 ஆகும்.
0 comments:
Post a Comment